Ineya Hot : கரும்பு காட்டில்.. பாவாடை தாவணியில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த இனியா- கண்ணை கட்டும் ஹாட் கிளிக்ஸ்

First Published Jan 14, 2022, 3:40 PM IST

இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லும் விதமாக பாவாடை தாவணியில் போட்டோஷூட் நடத்தி உள்ளார் இனியா.

மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, 'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார். 

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் 'அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒரு நாள்', 'நான் சிகப்பு மனிதன்', 'மெளனகுரு', 'புலிவால்' போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார். 

திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார்.

மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டாலும், தமிழில் உரிய இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார் இனியா.

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும்,  இனியா அவ்வப்போது ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். 

அந்த வகையில் இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லும் விதமாக பாவாடை தாவணியில் போட்டோஷூட் நடத்தி உள்ளார் இனியா.

கரும்பு காட்டின் நடுவே நின்றபடி கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

click me!