தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் பிரபல நடிகை ரோஜா. தற்போது அரசியல் வாதியாகவும் இருந்து வருவதால், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். எனினும் அவர் எது செய்தாலும், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது.
25
அந்த வகையில் தற்போது இவரை 3000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்ததை அடுத்து, உலகிலேயே அதிக போட்டோ கிராபர்கள் புகைப்படம் எடுப்பது இதுவே முதல் முறை என்பதால் ரோஜாவுக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
3000 போட்டோ கிராபர்கள் புகைப்படம் எடுக்க தயாராக இருக்கும் போது, ரோஜா மேடையில் ஏறியதும்... 3000 -யிரம் பேரும் ஒரே சமயத்தில் புகைப்படம் எடுத்தனர். எனவே உலகிலேயே ஒரு அமைச்சரை ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுப்பது இது தான் முதல் முறை என்பதால் இது சாதனையாக பார்க்கப்பட்டது.
மேலும் ரோஜா மேடையில் நின்றபடி... அனைத்து போட்டோ கிராபர்களுடனும் செல்ஃபி புகைப்படமும் எடுத்து கொண்டார்.
55
அதே போல்... 'ஒன் கிளிக் ஆன் சேம் டைம்' என்ற இந்த சாதனைக்காக தற்போது இதற்கான தாந்ரிழத்தை, நடிகையும் ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சருமான ரோஜாவிடம் அந்நிறுவனம் வழங்கி கௌரவித்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், ரோஜாவின் சாதனைக்கு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.