விஜய் உடன் கூட்டணி அமைக்கிறாரா டான் பட இயக்குனர்?... உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சிபி சக்ரவர்த்தி

Published : Jul 31, 2022, 02:10 PM IST

cibi chakaravarthi : டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க உள்ளாரா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

PREV
14
விஜய் உடன் கூட்டணி அமைக்கிறாரா டான் பட இயக்குனர்?... உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சிபி சக்ரவர்த்தி

அட்லீ இயக்கிய மெர்சல், பிகில் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சிபி சக்ரவர்த்தி. இவர் கடந்த மே மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கல்லூரி கதையம்சம் கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

24

அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் அடுத்த படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவர் அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் பரவி வந்தன.

இதையும் படியுங்கள்...ரசிகர்களை ஏமாற்றிய அல்லு அர்ஜுன்... புஷ்பா படத்தில் இப்படி ஒரு லாஜிக் மீறலா? - இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

34

இந்நிலையில், அதுகுறித்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அடுத்த படத்தின் கதையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிபி, கதை முழுவதுமாக தயார் ஆன பிறகு தான் அதற்கு யார் பொறுத்தமாக இருப்பார் என்பதை முடிவு செய்ய உள்ளதாகவும், விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளதாக பரவி வரும் தகவல் உண்மை இல்லை எனவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

44

நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் விஜய். இவர்கள் கூட்டணியில் தளபதி 67 திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்...சிவகார்த்திகேயனை கழட்டிவிட்டு ‘ராக்கி’யை களமிறக்கிய நெல்சன்- ரஜினியின் ஜெயிலர் படத்தில் நிகழ்ந்த அதிரடிமாற்றம்

Read more Photos on
click me!

Recommended Stories