நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் புஷ்பா. இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இப்படத்தில் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார்.