சிவகார்த்திகேயனை கழட்டிவிட்டு ‘ராக்கி’யை களமிறக்கிய நெல்சன்- ரஜினியின் ஜெயிலர் படத்தில் நிகழ்ந்த அதிரடிமாற்றம்

Published : Jul 31, 2022, 12:27 PM IST

Jailer : நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
சிவகார்த்திகேயனை கழட்டிவிட்டு ‘ராக்கி’யை களமிறக்கிய நெல்சன்- ரஜினியின் ஜெயிலர் படத்தில் நிகழ்ந்த அதிரடிமாற்றம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள புதிய படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் ஷுட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

24

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயில் வார்டன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... D இல்லேனா இந்த A இல்ல... திருச்சிற்றம்பலம் ஆடியோ லான்ச்சில் தனுஷ் குறித்து அனிருத் உருக்கம்

34

அவர் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருவதால், அவருக்கு பதில் வேறு நடிகரை தேர்வு செய்துவிட்டாராம் நெல்சன். அதன்படி சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த கேரக்டரில் நடிகர் வசந்த் ரவி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ராம் இயக்கிய தரமணி, அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

44

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஐதராபாத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் அங்கு ஆக்ஸ்ட் 1-ந் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதால், ஜெயில் பட ஷூட்டிங் திட்டமிட்டபடி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் ஷூட்டிங் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரீல் மற்றும் ரியல் நம்பி நாராயணனை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி! காலில் விழுந்து ஆசிபெற்ற மாதவன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories