இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமாக அறியப்படும் சீரியல் நடிகர், சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி. ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி பின்னர் சீரியல் நடிகராக மாறினார். 46 வயதாகும் இவர், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீர் என மயங்கி கீழே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சித்தாந்த் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்து பிரபலங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது , மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து வருவதால், இதுகுறித்து பல்வேறு கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. குறிப்பாக ஜிம்மில் உடல் பயிற்சியின் போது செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாது பற்றி பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பிரைவேட் டிடெக்ட்டிவாக வந்து காமெடியில் ரணகளம் செய்யும் சந்தானம்..! ஏஜென்ட் கண்ணாயிரம் ட்ரைலர் வெளியானது..!
இப்படி ஒருவித அச்சத்துடன் மக்கள் கேள்வி எழுப்ப காரணம், கடந்த ஆண்டு நவம்பரில், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது தன்னுடைய 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இளம் வயதிலேயே உடல் பயிற்சி செய்யும் போது இவர் உயிரிழந்தது தற்போது வரை அவருடைய ரசிகர்கள் பலரால் மறக்க முடியாத சம்பவமாக உள்ளது.
இப்படி அடுத்தடுத்து பிரபலங்களுக்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்படுவதால், ஒருவரின் இதயத்தை எவ்வாறு கவனித்து கொள்ள வேண்டும் என்றும், உடல் பயிற்சியின் போது செய்ய வேண்டியவை என்ன? செய்ய கூடாதது என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஆரோக்கியமான இதயத்திற்கு தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
உங்கள் வொர்க் அவுட்டை மிகைப்படுத்தாதீர்கள். தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்றாலும், அளவுக்கு அதிகமாக செய்ய வேண்டாம்.
சரியான முறையில் உடற்பயிற்சி செய்வது எப்படி?
மருத்துவர்களின் கருத்தின் படி, ஜிம்மில் அதிக உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம்.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகள்:
டிரெட்மில்லில் முதல் ஐந்து நிமிடங்கள் மெதுவாக நடக்க வேண்டும், படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி உங்களின் வேகத்தை ஏற்றி இரக்கம் செய்வது அவசியம், அதே போல் செங்குத்தாக டிரெட்மில்லில் ஓடுவதை மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரை செய்வது இல்லை. எனவே டிரெட்மில் சாய்வு குறைந்தபட்சமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
23 வருடங்களுக்கு பிறகு ராமராஜன் படத்தில் இணைந்த பிரபலம்! அதிகார பூர்வ தகவல் வெளியானது!
எடைப் பயிற்சி செய்யும் போது... நீங்கள் ஒரு தொடக்கப் பயிற்சியாளராக இருந்தால், உங்கள் பயிற்சியை எப்போதும் எளிமையான எடையுடன் தொடங்குங்கள். பின்னர் படிப்படியாக எடையை அதிகரிக்கவும். உங்களால் முடியாத ஒரு எடையை எப்போதும் தூக்கி பார்க்க நினைக்காதீர்கள்... இது மூச்சு பிடிப்பு போன்ற பிரச்சனைகளை கூட ஏற்படுத்தலாம்.
உடல் பயிற்சியின் போது, கவனிக்க வேண்டிய அறிகுறிகளில் ஒன்று வியர்வை. வியர்வை ஏற்படுவது இயற்கையானது என்றாலும், மார்பில் கனம், தாடை அல்லது இடது கையில் வலி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. இது போன்ற சில விஷயங்களை நினைவில் வைத்து கொண்டு உடல் பயிற்சி மேல்கொள்வது நல்லது.