உடன்குடியை சேர்ந்தவர் ஜிபி முத்து, டிக்டாக் மூலம் பிரபலமான இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன்காரணமாக கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் ஜிபி முத்து. முதல் வாரத்திலேயே பட்டைய கிளப்பிய அவர், இந்த சீசனில் இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது வாரத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் ஜிபி முத்து. தனது மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை, தன்னை வெளியே விடுமாறு பிக்பாஸிடம் கெஞ்சிக் கேட்டார். கமலும் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தும் மகன் மீதுள்ள பாசத்தால் அதனை ஏற்க மறுத்த ஜிபி முத்து பாதியிலேயே வெளியேறினார்.
யூடியூப் சேனல் நடத்தி வரும் ஜிபி முத்து சமீபகாலமாக புது படங்களின் புரமோஷனுக்காகவும் வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான லவ் டுடே படத்துக்காக இயக்குனர் பிரதீப் உடன் சேர்ந்து அவர் வெளியிட்ட வீடியோ வேறலெவலில் வைரல் ஆனது. இதையடுத்து தற்போது பரோல் படத்துக்காக புரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜிபி முத்து.