சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பொன்ராம். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை ருசித்த இவர், அடுத்ததாக ரஜினி முருகன் படத்தை இயக்கி அதன் மூலமும் வெற்றிவாகை சூடினார். இதையடுத்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் முனைப்பில் சீமராஜா படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார்.
ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு அடுத்த படியாக இவர் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் படமும் தோல்விப் படமாகவே அமைந்தது. இதன்பின்னர் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்தார் பொன்ராம். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்கிற நடிகை நடித்துள்ளார்.
அதன்படி இப்படத்திற்கு டிஎஸ்பி என பெயரிடப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு போலீஸ் கெட் அப்பில் விஜய் சேதுபதி மாஸாக பைக்கில் வரும்படியான புகைப்படம் அடங்கிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதாக தான் இதற்கு முன்னர் வரை கூறப்பட்டு வந்தது.