கலகத் தலைவன் இயக்குனர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த உதயநிதி.. மேடையிலேயே பதிலடி தந்த மகிழ் திருமேணி

First Published | Nov 11, 2022, 12:10 PM IST

கலகத் தலைவன் பட ஷூட்டிங்கை சீக்கிரமாக முடித்தாலும் பின்னணி பணிகளுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக உதயநிதி சொன்னதற்கு உடனடியாக பதிலடி கொடுத்தார் இயக்குனர் மகிழ் திருமேணி.

மகிழ் திருமேணி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் கலகத் தலைவன். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் வில்லனாக நடித்திருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 18-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், கலகத் தலைவன் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் சுந்தர் சி, மிஷ்கின், எம்.ராஜேஷ், மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன், அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

Tap to resize

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, அங்கு வந்திருந்த இயக்குனர்கள் அனைவரையும் கலாய்த்து தள்ளினார். அதேபோல் கலகத் தலைவன் இயக்குனர் மகிழ் திருமேணி மீதும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். இப்படத்தை எடுத்துமுடிக்க மகிழ் 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும், ஷூட்டிங்கை சீக்கிரமாக முடித்தாலும் பின்னணி பணிகளுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

இதையும் படியுங்கள்... நம்ப ஆட்டத்தை டோட்டலா கலைச்சி ஆடுனது அவன் தான்..! பரபரப்பு கட்சிகளோடு வெளியான 'கலகத் தலைவன்' ட்ரைலர்!

இப்படத்தில் நடித்து முடித்த பின்னர் தான் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். அப்படமே ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால் கலகத் தலைவன் இன்னும் ரிலீஸ் ஆகல. 3 வருஷமா படத்தை செதுக்கி வச்சிருக்காரு என பேசிக்கொண்டிருந்தார். உடனடியாக எழுந்து வந்த இயக்குனர் மகிழ் திருமேணி, உதயநிதியிடம் இருந்து மைக்கை வாங்கி தாமதத்திற்கான காரணத்தை கூறினார்.

அதன்படி இந்த படம் ஷூட்டிங் தொடங்கப்பட்ட பின்னர் இரண்டு முறை லாக்டவுன் போடப்பட்டதாகவும், அதுதவிர தேர்தல் பரப்புரைக்காக ஒரு மாதம் உதயநிதி சென்றுவிட்டதாகவும் கூறிய அவர், ஹீரோயின் தேர்வுக்காக மட்டும் மூன்று மாதங்கள் காத்திருந்ததாக தெரிவித்தார். எந்த ஹீரோயினை காட்டினாலும் வேண்டாம் என கூறி உதயநிதி ஒதுக்கிவிட்டதாக மகிழ் திருமேணி தெரிவித்தார். இதுதவிர பின்னணி பணிகள் தாமதம் ஆனதற்கு காரணம் அந்த சமயத்தில் தனக்கு இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று கூறினார்.

இதையும் படியுங்கள்... சர்ச்சைக்குரிய வாடகைத் தாய் கான்செப்ட் சமந்தாவுக்கு கைகொடுத்ததா?... யசோதா படத்தின் விமர்சனம் இதோ

Latest Videos

click me!