தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் ராதாகிருஷ்ணன். சுருக்கமாக ஆர்.கே. என அழைக்கப்படும் இவர் விஜய்யின் ஜில்லா மற்றும் பாலாவின் அவன் இவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஆவார். 63 வயதாகும் இவர் சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்கிற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
23
நேற்று நடிகர் ஆர்.கே வீட்டில் கொள்ளைசம்பவம் அரங்கேறி உள்ளது. வேலை காரணமாக ஆர்.கே. வெளியில் சென்றதை அடுத்து, அவரது மனைவி ராஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் மூன்று பேர், ராஜியை கட்டிப்போட்டு, அவரது வாயில் பிளாஸ்டர் ஒட்டிவிட்டு, வீட்டில் இருந்த 250 சவரன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள், கொள்ளை சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் வீட்டில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் வீட்டில் பணியாற்றிய நேபாளத்தை சேர்ந்த வாட்ச்மேனும் அவரது நண்பர்களும் சேர்ந்து திருடியது தெரியவந்தது.
இதன்பின்னர் நடிகர் ஆர்.கே. நந்தம்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளையர்களை வலைவீசி தேடி வரும் போலீசார், அவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு அவர்களது புகைப்படங்களை அனுப்பி தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.