இன்று வெளியான சமந்தாவின் 'யசோதா' படத்திற்கே டஃப் கொடுக்கும்... 'லவ் டுடே' 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

First Published | Nov 11, 2022, 1:07 PM IST

நடிகை சமந்தா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள, 'யசோதா' திரைப்படத்திக்கு நிகராக அதிக திரையரங்களுகளில் ஓடி கொண்டிருக்கும் 'லவ் டுடே படத்தின் 7 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

சமீப காலமாகவே திரைப்பட ரசிகர்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை, சிறிய பட்ஜெட் படங்களுக்கும், அறிமுக நடிகர்களின் படங்களுக்கும் தருவதில்லை என்கிற விவாதம் அதிகம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் வெளியான 'லவ் டுடே' திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ஒரு வாரத்தை கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ற பெற்று வருகிறது.
 

நடிகர் ஜெயம் ரவியை வைத்து 'கோமாளி' படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இந்த திரைப்படம், வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். 'லவ் டுடே'வெளியான இரண்டே நாட்களில், டபுள் மடங்கு வசூலை ஈட்டிய நிலையில் ஒரு வாரத்தை கடந்த பின்னரும், ரசிகர்கள் தொடர்ந்து இந்த இப்படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய வாடகைத் தாய் கான்செப்ட் சமந்தாவுக்கு கைகொடுத்ததா?... யசோதா படத்தின் விமர்சனம் இதோ
 

Tap to resize

இந்தப் படத்துடன் வெளியான பெரிய பட்ஜெட் படங்களான 'காஃபி வித் காதல்' போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்விய நிலையில், 2K கிட்ஸ் காதலை மையமாக வைத்து, அதிக காமெடி, கொஞ்சம் செடிமென்ட் என, தன்னுடைய பாணியில் படத்தை இயக்கி குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
 

மேலும் இன்று வெளியாகி உள்ள, சமந்தாவின் 'யசோதா' படத்திற்கு டஃப் கொடுக்கும் விதமாக திரையரங்குகளில் அதிக ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. 7 நாட்களில் இப்படம் சுமார் 28 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பு கொடுத்து வருவதால், வரும் நாட்களில் வசூல் அதிகமாகும் என திரைப்பட வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் பாலா இயக்கத்தில் வெளியான, 'நாச்சியார்' படத்தில் அறிமுகமான இவனா ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாராவது தன்னை பற்றியே அசிங்கமா பேச சொல்லுவாங்களா? சதீஷின் விளக்கத்தை பார்த்து கடுப்பான தர்ஷா குப்தா!
 

Latest Videos

click me!