இது ஒரு புறம் இருக்க துணிவு படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளும் பேட்டிகளில் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட மமதி சாரியும் துணிவு படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறாராம்.
சமீபத்திய பேட்டியில் அப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஓப்பனாக பேசி இருந்தார். அதில் தனக்கு சிறிய வேடம் தான் என்றாலும் மிகவும் என்ஜாய் பண்ணி நடித்ததாக கூறிய அவர், தான் கெட்ட வார்த்தை பேசும் காட்சிகளும் படத்தில் உள்ளதாக தெரிவித்தார். கோபத்தில் கூட கெட்ட வார்த்தை பேசிறாத தான் இப்படத்திற்காக முதன்முறையாக கெட்ட வார்த்தை பேசியதாக அந்த பேட்டியில் கூறினார்.
இதையும் படியுங்கள்... இன்று வெளியான சமந்தாவின் 'யசோதா' படத்திற்கே டஃப் கொடுக்கும்... 'லவ் டுடே' 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?