தீராத காதல்... மனைவியின் ஆசையை நிறைவேற்ற காதலனுடன் அனுப்பி வைத்த சந்திரபாபு! அந்த நபர் யார் தெரியுமா?

First Published | Aug 9, 2022, 1:07 PM IST

ஆசை ஆசையை தீராத காதலுடன் திருமணம் செய்து கொண்ட மனைவியை, ஒரே வாரத்தில் மனைவியில் ஆசைக்காக அவருடைய காதலனுடனே அனுப்பியவர். இவரை பற்றிய சிறு தொகுப்பு இதோ...
 

தமிழ் திரையுலகில், உடல்மொழியால் நடிக்கும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் ஜே.பி.சந்தரபாபு. கதாநாயகன், காமெடி நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என என தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவரது திரையுலக வாழ்க்கை செல்வம் செல்வாக்கை கொடுத்திருந்தாலும், இல்லற வாழ்க்கை சந்தோஷமானது கிடையாது. ஆசை ஆசையை தீராத காதலுடன் திருமணம் செய்து கொண்ட மனைவியை, ஒரே வாரத்தில் மனைவியில் ஆசைக்காக அவருடைய காதலனுடனே அனுப்பியவர். இவரை பற்றிய சிறு தொகுப்பு இதோ...

நடிகர் சந்திரபாபு தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவரது உண்மையான பெயர் ஜோசப் பிச்சை என்றாலும், இவரை அனைவரும் பாபு என்றே அழைப்பது வழக்கம். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்பதால் தன்னுடைய பெயரைச் சந்திரபாபு என இவரே மாற்றிக் கொண்டார். இவரது தந்தை ஒரு விடுதலை போராட்ட வீரர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டவர். அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது ஆங்கிலேயே அரசு. 

மேலும் செய்திகள்: அடம்பிடித்து ஒரு வழியா சென்னைக்கே வந்து செட்டில் ஆன அறந்தாங்கி நிஷா!
 

Tap to resize

அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார் சந்தரபாபுவின் தந்தையார். சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி தன்னுடைய படிப்பை முடித்தார். சந்திரபாபுவின் குடும்பம் 1943 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பி சென்னையில் குடியேறியது. தன்னுடைய தந்தை போலவே இவரும்  நாளிதழில் பணியை துவங்கினார்.

இவர் ஒரு தமிழராக இருந்தாலும், ஆங்கிலேயரின் நவ நாகரீக ஆடைகள், மற்றும் அணிகலன்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். எப்போதும் ஸ்டைலிஷாக இருப்பதை விரும்புவார். எனவே இவரது கவனம் திரையுலகின் பக்கம் திரும்பியது. தன்னுடைய 16 வயதில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார். ஒரு படத்திற்கு வாய்ப்பு கேட்க சென்ற போது, அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனவே தற்கொலைக்கு முயன்றார். இதற்காக நீதிமன்றம் வரை சென்ற சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார்: “உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும் என வாதிட்டார்.”

மேலும் செய்திகள்: நிஜ பெண்களே தோற்றுவிடுவார்கள்... 'பிக்பாஸ் ஜோடி 2' ஆண் போட்டியாளர்களின் அசர வைக்கும் லேடீஸ் கெட்டப்! போட்டோஸ்
 

ஒருவழியாக 1947ஆம் ஆண்டு 'அமராவதி' என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி, மிக விரைவிலேயே முன்னணி காமெடி நடிகர் என்கிற அடையாளத்தை பெற்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் என அப்போதே அனைத்து  முன்னணி நடிகர்களின் படங்களிலும் சந்திரபாபு தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல் பாடல் பாடுவதிலும் வல்லவர்.

திரையுலக வாழ்க்கையில் இவர் நினைத்த தூரத்தை மிக விரைவாகவே எட்டினாலும், இவரது சொந்த வாழ்க்கை சொல்லிக்கொள்ளும் படி சந்தோஷமாக அமைந்து விடவில்லை. கோயம்புத்தூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சுவாமிகண்ணு வின்சென்ட்டின், பேத்தியும், ஆங்கிலோ இந்தியருமான ஷீலாவை சந்திரபாபு முதன்முதலில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போதே அவருக்கு ஷீலாவை மிகவும் பிடித்து விட்டது. ஆசை ஆசையாக தீராத காதலுடன், 1958 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. 

மேலும் செய்திகள்: முண்டா பனியனில் முரட்டு கவர்ச்சி... நிவேதா பெத்துராஜின் செம்ம ஹாட் போஸால் மூச்சு முட்டி போன ரசிகர்கள்!
 

அப்போதைய சினிமா வட்டாரமே மெச்சும் படி நடந்த இவரது திருமணத்தில் முதல்வர் காமராஜ் உட்பட பிரபல திரையுலகப் பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய மனைவி ஷீலா வேறொருவரை காதலித்ததாக கூறியதும், அவரது ஆசையை நிறைவேற்ற, அவரது காதலனுடனே  சேர்த்து வைத்தார். 

ஷீலாவின் காதலர் லண்டனை சேர்ந்தவர் என்பதால், அவர் லண்டன் செல்லும் வரை சந்திரபாபு தொடர்ந்து தன்னுடைய ஆதரவை அவருக்கு கொடுத்து வந்தார். சில நாட்களுக்குப் பிறகு, முறையாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், சந்திரபாபுவின் ஒப்புதலுடன் லண்டனை சேர்ந்த, தன்னுடைய காதலரான மருத்துவர் ஒருவரை ஷீலா திருமணம் செய்து கொண்டார்.

மேலும் செய்திகள்: பார்பி பொம்மை போல்... குட்டை கவுனில் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்கள் மனதை குளிர வைத்த ஹன்சிகா! லேட்டஸ்ட் போட்டோ
 

திருமண வாழ்க்கை கொடுத்த வலியை  அவர் வெளிக்காட்டி கொள்ளவில்லை என்றாலும், அது அவரை அதிகம் பாதித்தது.தனது திரையுலக வாழ்க்கையில் இருந்து தற்காலிக ஓய்வு எடுக்க முடிவு செய்த அவர், தனது நெருங்கிய நண்பர்களிடம் கூட தெரிவிக்காமல் டெல்லி சென்றார். அந்த நாட்களை அவர் மது அருந்திக்கொண்டே இருந்தார். பின்னர் அவர் காதல் மற்றும் திருமணம் தோல்வியுற்ற போதிலும் தொழிலில் தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார். தொழில் ரீதியாகவம் சில தோல்விகளை சந்தித்தார் சந்திரபாபு.

இவர் ஒரு கிறித்தவர் என்பதால், மாதா மீது கொண்ட பற்றின் காரணமாக... சர்ச் கட்டுவதற்கு கலைநிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி கொடுத்துள்ளார். மேலும், வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்தித்த இவருடைய வாழ்க்கை வரலாறு... கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான அந்த 7 நாட்கள் படம் கூட சந்திரபாபுவை நினைவில் வைத்து கதை எழுதப்பட்டகாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!