இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல... அதற்குள் ஷங்கர் மகளுக்கு இவ்வளவு சம்பளமா..! வெளியான ஷாக்கிங் தகவல்

Published : Aug 09, 2022, 12:06 PM ISTUpdated : Aug 10, 2022, 08:58 AM IST

Aditi Shankar : இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்த விருமன் படம் கூட இன்னும் ரிலீசாகாத நிலையில், மாவீரன் படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல... அதற்குள் ஷங்கர் மகளுக்கு இவ்வளவு சம்பளமா..! வெளியான ஷாக்கிங் தகவல்

கோலிவுட் படங்களை இந்திய அளவில் பேச வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் ஷங்கர். இவரின் இந்தியன், எந்திரன் போன்ற படங்கள் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் படங்களாகவே பார்க்கப்படுகின்றன. இவரது இளைய மகள் அதிதி, தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் அவரைப் பற்றிய பேச்சு தான்.

25

இவர் நடித்த ஒரு படம் கூட இன்னும் ரிலீஸ் ஆகாத போதும், தற்போதே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. அந்த அளவுக்கு கோலிவுட்டின் சென்ஷேசனாக உருவெடுத்துள்ளார் அதிதி. இவர் நடித்துள்ள விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் படு பிசியாக உள்ளார் அதிதி.

35
maaveeran

இவர் நடித்துள்ள விருமன் படம் ரிலீசாகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆகிவிட்டார் அதிதி. அதன்படி மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் அதிதி. இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... இடிந்து கிடந்த அரசுப்பள்ளி.. நண்பனுடன் சேர்ந்து சீரமைத்து கொடுத்த கார்த்தி- ரியல் ஹீரோ என பாராட்டும் ரசிகர்கள்

45

இந்நிலையில், மாவீரன் படத்துக்காக நடிகை அதிதி வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க அவர் ரூ.25 லட்சம் சம்பளமாக வாங்கி உள்ளாராம். அறிமுக நடிகை ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

55

மறுபுறம் இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் அவருக்கு இவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது. சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகைகள் சிலருக்கு கூட இந்த அளவு சம்பளம் வழங்கப்படாத நிலையில் இரண்டாவது படத்திலேயே அதிதி இந்த அளவு சம்பளம் பெற்றுள்ளது பேசுபொருள் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... viruman : ஷங்கர் மகளுக்காக பிரபல பாடகி பாடிய பாடலையே தூக்கிய யுவன்... விருமன் படத்தில் நடந்த கோல்மால் வேலை

Read more Photos on
click me!

Recommended Stories