Vijay Sethupathi : விக்ரம் படம் ரிலீசான ஒரே மாதத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஷாருக்கானின் ஜவான் உள்பட 3 படங்களில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் அறிமுகமான பின்னர் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று இல்லாமல், வில்லன், குணச்சித்திர வேடங்கள், கெஸ்ட் ரோல் என பாகுபாடு பார்க்காமல் நடித்து வருகிறார். இதன் காரணமாகவே அவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீப காலமாக இவர் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் போன்ற பிற மொழி படங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றார்.
24
குறிப்பாக விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்த பின்னர், நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லன் வாய்ப்புகள் அதிகளவில் குவிந்து வருகின்றன. விக்ரம் படம் ரிலீசான ஒரே மாதத்தில் அவர் 3 படங்களில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். அதில் அவர் முதலாவதாக கமிட் ஆன படம் புஷ்பா 2. இப்படத்தின் முதல் பாகத்திலேயே வில்லனாக நடிக்க இருந்த விஜய் சேதுபதி கடைசி நேரத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினார்.
ஆனால் இந்த முறை இவருக்கென பலமான வில்லன் வேடம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் இயக்குனர் சுகுமார். இதன்பின்னர் பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் சேதுபதி. அதேபோல் தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிக்கவும் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார் மக்கள் செல்வன்.
44
இந்த மூன்று பட வாய்ப்புகளும் கடந்த ஒரே மாதத்தில் கிடைத்துள்ளன. இதற்காக அவர் வாங்கிய சம்பள விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி ஜவான் படத்திற்காக ரூ.30 கோடியும், புஷ்பா 2 மற்றும் பாலகிருஷ்ணா படத்துக்காக தலா ரூ.25 கோடி என மொத்தம் ரூ.80 கோடி சம்பளமாக பெற ஒப்பந்தம் செய்துள்ளாராம் விஜய் சேதுபதி. இதன்மூலம் இவர் இந்திய சினிமா உலகின் காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.