நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, ஷூட்டிங்கின் போது நடந்த விஷயம் ஒன்றை கூறினார்.