நடிக்கும் படமெல்லாம் ஹிட்... சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராஷ்மிகா

Published : Aug 09, 2022, 08:21 AM IST

Rashmika Mandanna : கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தனது சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தி உள்ளாராம்.

PREV
14
நடிக்கும் படமெல்லாம் ஹிட்... சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் ரஷ்மிகா. இரண்டே படத்தில் பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. நன்கு தமிழ் பேச தெரிந்த இவருக்கு கோலிவுட்டிலும் அதிக மவுசு உள்ளது.

24

இதன் காரணமாக கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் ராஷ்மிகா. இதன்பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற அவருக்கு அங்கு அடுத்தடுத்து 3 பட வாய்ப்புகள் குவிந்துள்ளன. அதுமட்டுமின்றி கோலிவுட்டில் டாப் நடிகரான விஜய் உடனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இதையும் படியுங்கள்... viruman : ஷங்கர் மகளுக்காக பிரபல பாடகி பாடிய பாடலையே தூக்கிய யுவன்... விருமன் படத்தில் நடந்த கோல்மால் வேலை

34

நடிகை ராஷ்மிகாவுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பட வாய்ப்புகள் குவிந்து வருவதற்கு முக்கிய காரணம் அவரது சக்சஸ் தான். குறிப்பாக சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியான புஷ்பா, சீதா ராமம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளன. இதனால் ராசியான ஹீரோயின் என்றும் பெயர் எடுத்துள்ளார் ராஷ்மிகா.

44

நார்த் முதல் சவுத் வரை தனக்கு இருக்கும் மவுசை புரிந்துகொண்ட ராஷ்மிகா, தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதற்கு முன் ஒரு படத்துக்கு ரூ,2 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த இவர், அதனை தற்போது டபுள் மடங்காக உயர்த்தி ஒரு படத்து ரூ.4 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம். இனி அவர் நடிப்பில் வரும் படங்கள் ஹிட்டாவதை பொறுத்து அவர் மேலும் சம்பளத்தை அதிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... உள்ளாடை அணியாமல்..காட்டுவாசி போஸ்..கலங்கடிக்கும் ஆதா ஷர்மா!

Read more Photos on
click me!

Recommended Stories