தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பது அதிதி ஷங்கர் தான். இயக்குனர் ஷங்கரின் மகளான இவர், விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள அதிதி, முதல் படம் ரிலீசாகும் முன்பே அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருவது சர்ச்சையை கிளப்பியது.