முண்டா பனியனில் முரட்டு கவர்ச்சி... நிவேதா பெத்துராஜின் செம்ம ஹாட் போஸால் மூச்சு முட்டி போன ரசிகர்கள்!
நடிகை நிவேதா பெத்துராஜ், தன்னுடைய வீட்டில் இருந்தபடி செம்ம ஹாட்டான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நிவேதா பெத்துராஜுக்கு முதல் படமே, நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
திரைப்படங்களில் உச்ச கட்ட கவர்ச்சியை காட்டவும் தயாராக இருக்கும் நிவேதா பெத்துராஜ், 'டிக் டிக் டிக்' படத்தில், நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கிரங்கடித்தார்.
மேலும் செய்திகள்: பார்பி பொம்மை போல்... குட்டை கவுனில் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்கள் மனதை குளிர வைத்த ஹன்சிகா! லேட்டஸ்ட் போட்டோ
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சங்கத்தமிழன், பொன்மாணிக்க வேல் போன்ற படங்கள் படு மோசமான தோல்வியை தழுவியதால் இவருக்கு, தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்தது.
தமிழ் படங்களின் வாய்ப்புகள் குறைந்தாலும், தெலுங்கில் இவர் நடித்த படங்களான 'ஆள வைகுண்டபுரமுலு' , 'சித்திரலாஹரி' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது இவருக்கு தெலுங்கு திரைப்பட வாய்ப்புகளே அதிகம் குவிகிறது.
மேலும் செய்திகள்: இதுவே பெரிய சாதனை தானே... 11 நாள் முடிவில் 'தி லெஜெண்ட்' படம் வசூல் செய்தது எத்தனை கோடி தெரியுமா?
பட வாய்ப்புக்காக அடுத்தடுத்து செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும், நிவேதா பெத்துராஜ் தற்போது முண்டா பனியன் அழகில்... ஹாட் கவர்ச்சியை வெளிப்படுத்தும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.