1990-களில் இருந்து ஹிந்தி திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி.
தமிழில் இவர் நடித்த முதல் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, ஆஷிஷ் வித்யார்த்தியின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து, விஜய், ரஜினி, அர்ஜுன், பிரசாந்த் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க துவங்கினார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக இவை ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் திருமணம் குறித்த தகவல் தான் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆஷிஷ் வித்யார்தி - ராஜோஷி தம்பதிக்கு அர்ஷ் என்கிற 23 வயது மகன் உள்ள நிலையில், தன்னுடைய 60-ஆவது வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்துள்ளார்.
தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வளைத்ததில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரூபாலி தன்னுடைய திருமணத்தில், நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.