கேன்ஸ் விழாவில்... ஹீரோ - ஹீரோயினரை மிஞ்சிய அட்லீ - பிரியா ஜோடி! ரெட் கார்பெட் போட்டோஸ்!

First Published | May 26, 2023, 4:04 PM IST

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக, பிரான்ஸ் நாட்டுக்கு மனைவி பிரியாவுடன் சென்றுள்ள அட்லீ அங்கு ரெட் கார்பெட் நிகழ்ச்சியின் போது எடுத்துக்கொண்ட போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

ஒவ்வொரு வருடமும் பிரான்ஸில் நடக்கும், கேன்ஸ் சர்வதேச பட விழா, இந்த ஆண்டும் கடந்த மே 16 ஆம் தேதி துவங்கியது. 76வது கேன்ஸ் திரைப்பட விழாவிழாவில்,  இந்தியா சார்பில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் விதவிதமான உடைகளில் கேட் வாக் செய்து வருகிறார்கள்.

இந்தியா சார்பில், கலந்து கொள்ளும் சில பிரபலங்கள்... அமைச்சர் எல்.முருகன் தலைமையில் கலந்து கொண்ட நிலையில், இவர்களை தொடர்ந்து... நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலிகான், ஊர்வசி ரவுட்டேலா, மவுனி ராய்,  மிருணாள் தாக்கூர், குஷ்பூ, விக்னேஷ் சிவன், அதிதி ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

'லவ் டுடே' ஹிந்தி ரீமேக்..! ஹீரோவாகும் சூப்பர்ஸ்டாரின் வாரிசு! ஹீரோயின் யார் தெரியுமா?

Tap to resize

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு... தமிழில் ராஜா ராணி, தெறி, பிகில், மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி முடித்துள்ள, அட்லீ தன்னுடை மனைவியுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்டு சென்றார்.

இவர்கள் பிரான்ஸ் சென்று 3 நாட்கள் ஆகும் நிலையில்... ஹீரோ - ஹீரோயினை மிஞ்சும் அழகில், கருப்பு நிற உடையில், பிரியா மற்றும் அட்லீ ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் தோன்றினர். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சிவப்பு நிற கோட் - சூட்டில் ... லேடி பாஸ் கெட்டப்பில் போஸ் கொடுத்து ராஷ்மிகா! வைரலாகும் போட்டோஸ்!

Latest Videos

click me!