5 இல்ல 6 பேர்; வைல்டு கார்டு எண்ட்ரியில் ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்! யார் அந்த 6 பேர்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இந்த வாரம் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் ஒரு ட்விஸ்டாக 6 பேர் எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் அதகளமாக தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் முதல் வார இறுதியில் ரவீந்தரும், இரண்டாவது வாரம் அர்னவ்வும், மூன்றாவது வாரம் தர்ஷா குப்தாவும் எலிமினேட் ஆகி வெளியே சென்றனர். இதையடுத்து எஞ்சியிருந்த 15 பேரில் இந்த வாரமும் ஒருவர் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்டாக இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என அறிவித்தார் விஜய் சேதுபதி.

Bigg Boss Wild Card Contestant

இதனால் இந்த வாரம் எலிமினேட் ஆக இருந்த அன்ஷிதா நூலிழையில் தப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி தீபாவளி போனஸாக வைல்டு கார்டு போட்டியாளர்களையும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப உள்ளதாக விஜய் சேதுபதி அறிவித்திருந்தார். கடந்த சீசனை போல் இந்த சீசனும் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரே நாளில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் புது ட்விஸ்டாக 6 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்க உள்ளார்களாம். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.


Rayan

ரயான்

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் 6 வைல்டு கார்டு போட்டியாளர்களுள் ஒருவர் தான் ரயான். இவரும் விஜய் டிவி புராடக்ட் தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்திருந்தார். இதில் ட்விஸ்ட் என்னவென்றால் அந்த சீரியலில் நடித்த ஹீரோ தீபக் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் உள்ளார். ரயானின் வருகையால் தீபக்கின் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Riya

ரியா தியாகராஜன்

பிக்பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்க உள்ள மற்றொரு போட்டியாளர் ரியா தியாகராஜன். இவர் ஒரு மாடல் அழகி. கடந்த 2023ம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை அழகிப் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்தார் ரியா. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரிவ்யூ செய்பவராகவும் ரியா இருந்துள்ளார். தனியாக யூடியூப் சேனலும் வைத்திருக்கும் ரியா, பிக்பாஸ் போட்டியாளர் விஜே விஷாலின் முன்னாள் காதலி என்றும் கூறப்படுகிறது.

Manjari

மஞ்சரி

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள வைல்டு கார்டு போட்டியாளர்களில் மஞ்சரியும் ஒருவர். இவர் ஒரு பேச்சாளர். இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐடி துறையில் வேலை பார்த்து வந்த இவர், தன்னுடைய பேச்சுத்திறமையால் கவனம் பெற்றார். தற்போது பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் முத்துக்குமரன் உடன் பல மேடைகளில் சேர்ந்து பேசி இருக்கிறாராம் மஞ்சரி.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் ரஞ்சித்துக்கு எம்.ஜி.ஆர் வைத்த உண்மையான பெயர் என்ன தெரியுமா?

Varshini

வர்ஷினி வெங்கட்

பிக்பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்க உள்ள மற்றொரு பெண் போட்டியாளர் தான் வர்ஷினி. இவர் நடிகை, பாடகி, பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். அதுமட்டுமின்றி மாடலிங்கிலும் ஆர்வம் கொண்ட வர்ஷினி  Miss Golden face of south india என்கிற அழகிப் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்திருந்தார்.

Shivakumar, Suja Varunee

ஷிவகுமார்

பிக்பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ள 5வது போட்டியாளர் ஷிவகுமார். இவர் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சுஜா வருணியின் கணவர் ஆவார். சுஜா வருணி பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து அதகளப்படுத்தினார். அதேபோல் அதகளப்படுத்த வருகிறார் ஷிவகுமார். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Raanav

ராணவ்

பிக்பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்க உள்ள மற்றொரு நடிகர் ராணவ். இவர் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இவரின் வருகையால் இந்த சீசனில் டைட்டில் வின்னராக இவர் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் நடந்த 7 சீசன்களில் ARM என்கிற பார்மட்டில் தான் வெற்றியாளர்கள் அமைந்துள்ளனர். அந்த வகையில் முதல் மூன்று சீசனில் ஆரவ், ரித்திகா, முகென், அடுத்த மூன்று சீசனில் ஆரி, ராஜு, முகமது அசீம், ஏழாவது சீசனில் அர்ச்சனா டைட்டில் வென்றதால் இந்த சீசனில் R என்கிற எழுத்தில் தொடங்கும் போட்டியாளர் தான் வெற்றிபெறுவார் என கூறப்பட்டு வந்தது. அந்த வகையில் ராணவுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கணித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் சீசன் 8; 25வது நாளை கவினுடன் கேக் வெட்டி கொண்டாடிய போட்டியாளர்கள் - Viral Video!

Latest Videos

click me!