அமரன் படத்தால் கடகடவென நிரம்பும் கமலின் கஜானா! 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

First Published | Nov 3, 2024, 8:57 AM IST

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ள அமரன் திரைப்படத்தின் 3ம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Amaran

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று மாஸ் ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ரங்கூன் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் மறைந்த முன்னாள் இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது.

sivakarthikeyan

அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இராணுவ வீரனாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்றால் அது அமரன் தான். இப்படத்திற்காக கட்டுமஸ்தான் உடற்கட்டுக்கு மாறியதோடு, துப்பாக்கி சுடுதல் பயிற்சியும் பெற்றும் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதையும் படியுங்கள்.... "இது தான் கேரியர் பெஸ்ட்" சிவகார்த்திகேயனுக்கு மெகா ஹிட்டடித்த டாப் 3 படங்கள் - லிஸ்ட் இதோ!

Tap to resize

Amaran Box Office

தீபாவளி பண்டிகைக்கு வெளியான ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவினின் ப்ளடி பெக்கர் ஆகிய படங்களை அசால்டாக அடிச்சுதூக்கி வசூலில் மாஸ் காட்டி வருகிறது அமரன் திரைப்படம். இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அமரன் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.42 கோடி வசூலித்திருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் முதல் நாளிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக அமரன் இருந்தது.

Amaran 100 crore Box Office Collection

இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் நாளில் 35 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், மூன்றாம் நாளிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி, வசூல் வேட்டையை தொடர்ந்துள்ளது. அந்த வகையில் அமரன் திரைப்படம் மூன்றாம் நாளில் ரூ.30 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது. சிவகார்த்திகேயன் கெரியரில் இதுவரை அதிக வசூல் செய்த படம் என்றால் அது டான் தான். அப்படம் 125 கோடி வசூலித்திருந்தது. அந்த வசூலை அமரன் படம் நான்கே நாட்களில் எட்டிவிடும் என கூறப்படுகிறது.

Amaran Day 3 Box Office Collection

அமரன் படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மைல்கல் படமாக அமைய உள்ளது என்பது அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மூலமே தெரியவருகிறது. இப்படத்தை தயாரித்த உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கஜானா நிரம்பி வழியும் அளவுக்கு அமரன் படம் லாபத்தை அள்ளித்தந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இன்றும் விடுமுறை தினம் என்பதால் அமரன் படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்....  கண்ணா சும்மா பின்னிட்ட! 'அமரன்' பார்த்த கையேடு சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்!

Latest Videos

click me!