பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு குறுகிய காலகட்டத்தில் நல்ல பாப்புலாரிட்டி கிடைப்பதோடு, சம்பளமும் வாரி வழங்கப்படும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செல்லம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த அன்ஷிதா, அந்த சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 வாரம் மட்டுமே தாக்குப்பிடித்த அன்ஷிதா, இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியேறினார்.