"இது தான் கேரியர் பெஸ்ட்" சிவகார்த்திகேயனுக்கு மெகா ஹிட்டடித்த டாப் 3 படங்கள் - லிஸ்ட் இதோ!

First Published | Nov 2, 2024, 8:04 PM IST

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் மெகா ஹிட்டாகி, இந்த வருடத்தின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மாறி வருகிறது.

Sivakarthikeyan

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, அதில் வெற்றி பெற்று, அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தன்னுடைய டைமிங் காமெடியால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நடிகர் தான் சிவகார்த்திகேயன். அதன் பிறகு மெல்ல மெல்ல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கிய அவர், இந்த 10 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி ஒரு ஹிமாலாய வளர்ச்சி என்றே கூறலாம். தற்பொழுது தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்கள் பட்டியலில் அவரும் இணைந்து இருக்கிறார். இப்பொழுது பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமலஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தில் "முகுந்தன் வரதராஜன்" என்கின்ற கதாபாத்திரத்தில் ஒரு ராணுவ வீரராக அவர் நடித்துள்ளார்.

மச்சானோடு செம சேட்டை; தடபுடல் விருந்தோடு தலை தீபாவளியை கொண்டாடிய வரலக்ஷ்மி நிக்கோலாய் ஜோடி!

Nayanthara

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நட்சத்திரங்களும் சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் அமரன் திரைப்படத்தை பெரிய அளவில் பாராட்டிய வருகின்றனர். இந்த சூழலில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் வசூல் சாதனை படைத்த டாப் 3 திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். இதில் மூன்றாவது இடத்தில் இருப்பது கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன். பிரபல இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் இது. இந்த திரைப்படம் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான நிலையில், பிரீ ரிலீஸுக்கு முன்பாகவே சுமார் 50 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய வேலைக்காரன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக உலக அளவில் 88 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் ஹிட் திரைப்படமாக மாறியது.

Tap to resize

DON

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு பிரபல இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் டான். பிரியங்கா மோகன் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். ரிலீஸுக்கு முன்பாகவே சுமார் 38 கோடி ரூபாய் விற்பனையான இந்த திரைப்படம் உலக அளவில் 122 கோடி வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது. இதுவரை சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றில் 122 கோடி வரை வசூல் செய்த ஒரே திரைப்படமாக டான் இருந்து வந்தது.

Amaran

ஆனால் டான் படத்தின் சாதனையை விரைவில் அமரன் திரைப்படம் முறியடிக்கவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியான நிலையில், இந்த இரண்டு நாட்களில் உலக அளவில் சுமார் 45 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் இந்த திரைப்படம் உலக அளவில் 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடவுள் தந்த தீபாவளி பரிசு; மகிழ்ச்சியில் "தாத்தா எம்.எஸ் பாஸ்கர்" - வெளியான லவ்லி கிளிக்ஸ்!

Latest Videos

click me!