சின்னத்திரை நாடகங்கள் முதல், வெள்ளித்திரை திரைப்படங்கள் வரை தன்னுடைய அசாத்திய நடிப்பினாலும், எந்த மொழியாக இருந்தாலும் அதில் ஆளுமை கொண்ட மனிதராகவும் திகழ்ந்து வரும் எம்எஸ் பாஸ்கருக்கு இரண்டு பிள்ளைகள். அதில் மூத்தவர் பிரியங்கா பாஸ்கர் மற்றும் இளையவர் ஆதித்யா பாஸ்கர். இவர்கள் இருவருமே இப்போது திரை துறையிலும் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல ஐஸ்வர்யா பாஸ்கர் தன்னுடைய பெரியம்மா மற்றும் அப்பாவை போல மிகச்சிறந்த டப்பிங் கலைஞராகவும் தற்போது தமிழ் திரை உலகில் பயணித்து வருகிறார்.