
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வரும் 'அமரன்' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக் குழுவினரை அழைத்து பாராட்டி உள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் நுழைந்து, 3 திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். பின்னர் காமெடி கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் நடித்த மெரினா, மனம் கொத்தி பறவை, மான்கராத்தே, ரஜினி முருகன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்து தன்னைத்தானே செதுக்கிக் கொள்ள துவங்கிய சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து சில ஆக்சன் காட்சிகள் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், அதிரடி ஆக்சன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், சிவகார்த்திகேயனின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. ரெமோ, டாக்டர், டான் போன்ற தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து ரூ.100 கோடி வசூல் செய்யும், மாஸ் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன் தற்போது விஜய், அஜித், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களின் வரிசையில் உள்ளார்.
நடிப்பை தாண்டி, ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள சிவகார்த்திகேயன், கடந்த சில வருடங்களாகவே வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்தார். 'அயலான்' திரைப்படம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்த்த நிலையில், மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
எதிர்பாராத எலிமினேஷன்; கண்ணீரோடு பிக்பாஸ் சீசன் 8 வீட்டிற்கு குட்பை சொன்ன போட்டியாளர் இவர் தான்!
இதைத் தொடர்ந்து, மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'அமரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படத்தில் முகுந்த் வரதராஜனின் காதல் மனைவி இந்து கதாபாத்திரத்தில், நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்காக உடலை ஏற்றி, இறக்கி, நடை, உடை, பாவனை, என அனைத்தையும் மாற்றி... ராணுவ வீரர்களுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு தான் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்தார்.
இந்த படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவியது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியான அமரன் திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக ஹவுஸ் ஃபுல்லாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், ஒரே நாளில் மட்டும் உலகளவில் ரூ.42.3 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதே போல் தமிழகத்திலும், சுமார் 20 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டாவது நாளிலும் சுமார் 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுவதால், எப்படியும் இப்படம் 500 கோடிக்கு மேல் வசூலை எட்ட வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குட் நியூஸ் சொன்ன கையேடு.. 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலை விட்டு விலகும் நடிகை?
இந்நிலையில் இந்த படத்தை பார்த்த கையோடு, தன்னுடைய நண்பரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான கமலஹாசனுக்கு போன் செய்து ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில், பட குழுவினரை அழைத்து நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார். அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினர் ரஜினிகாந்தை சந்தித்த போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக சிவகார்திகேயனிடம் கண்ணா நடிப்பில் சும்மா பின்னிட்ட என கட்டி அணைத்து தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த் என கூறப்படுகிறது.