எதிர்பாராத எலிமினேஷன்; கண்ணீரோடு பிக்பாஸ் சீசன் 8 வீட்டிற்கு குட்பை சொன்ன போட்டியாளர் இவர் தான்!

First Published | Nov 2, 2024, 1:36 PM IST

இன்றைய தினம், பிக்பாஸ் வீட்டில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய பெண் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

Bigg boss Tamil season 8

விஜய் டிவி தொலைக்காட்சியில், கடந்த அக்டோபர் மாதம், 6-ஆம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, வெற்றிகரமாக ஒரு மாதத்தை எட்ட உள்ளது. நிகழ்ச்சி துவங்கியபோது சிலர், ஒரு சில வாரங்கள் கூட தாக்கு பிடிக்க மாட்டார்கள் என கூறப்பட்ட ரஞ்சித், சத்யா, முத்து குமரன் ஆகியோர் எதார்த்தமாக விளையாடி மக்கள் மனதையும் ரசிகர்கள் மனதையும் கவர்ந்துள்ளனர்.
 

Bigg boss Today Elimination

அதே போல் விஜய் சேதுபதி, போட்டியாளர்களை தட்டி கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டி கொடுத்தும், வெளுத்து வாங்க வேண்டிய இடத்தில் பார பச்சன் இன்றி கேள்வி கேள்விகளால் ப்ரை செய்வது மக்களின் பாராட்டை பெற்று வருகிறது. குறிப்பாக கமல் ஸ்டைலை துளியும் காப்பி அடிக்காமல், தன்னுடைய பாணியில் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது தான், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமாகவும் பார்க்கப்படுகிறது.
 

Tap to resize

Bigg boss safe zone contestant

பிக்பாஸ் சீசன் 8, நிகழ்ச்சி துவங்கிய போது ... மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்ற நிலையில், இதுவரை ரவீந்தர், அர்னவ், மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டதால் மொத்தம் 15 போட்டியாளர்கள் போட்டி போட்டு கொண்டு தங்களை நிலைநிறுத்தி கொள்ள விளையாடி வருகிறார்கள். மேலும் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ரஞ்சித், தீபக், ஜெப்பிரி, சத்யா, சுனிதா, பவித்ரா ஜனனி, அன்ஷிதா மற்றும் அருண் ஆகிய 9 பேர் பெயர் இடம்பெற்றிருந்தது.
 

Anshitha Anji Eliminated

இவர்களில், பவித்ரா ஜனனி தான் மக்களின் வாக்குகள் அடிப்படையில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக  நெட்டிசன்கள் கணித்து கூறி வந்தனர்.

ஆனால் நூல் இழையில் பவித்ரா ஜனனி தப்பித்துள்ள நிலையில், நடிகை ஆஷிதா யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.  இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'செல்லம்மா' சீரியலில் நடித்து பிரபலமானவர். அதே போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், கலந்து கொண்டு கோமாளியாக தன்னுடைய சிறந்த பங்களிப்பை கொடுத்தார்.

Vijay tv serial Heroine Anshitha

'செல்லம்மா' சீரியலில் ஹீரோவாக நடித்த அர்னவை இவர் காதலிப்பதாக, ஆர்னவ் மனைவி திவ்யா ஸ்ரீதர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், மீடியாவில் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அன்ஷிதா அவரை திட்டியபோது ரெகார்ட் செய்த ஆடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அர்னவ் - அன்ஷிதா இருவரும் ஒன்றாக, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததால், காதல் கண்டெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... இருவரும் கொஞ்சம் ஓவராகவே நடித்து மக்களை கடுப்பேற்றினர்.

அர்னவ் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தவரை... கன்டென்ட் கொடுத்து விளையாடிய அன்ஷிதா, அர்னவ் வெளியே சென்ற பின்னர், விளையாட்டில் சரியாக கவனம் செலுத்தாதது போல் தோன்றியது. டாஸ்கில் இவருடைய பங்களிப்பு இருந்த போதிலும், தனித்துவமாக தெரியாமல் போனார். இந்நிலையில், இந்த வாரம்... மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று அன்ஷிதா கண்ணீருடன் வெளியேறியுள்ளார். மேலும் இன்றைய தினம் 5 புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest Videos

click me!