Sivakarthikeyan amaran
கடந்த சில வருடங்களாகவே ஒரே ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவர் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளியான 'அயலான்' திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், போட்ட பணத்தில் பாதியைக் கூட வசூல் செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது.
Amaran Box Office
இதைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 3 வருடத்திற்கு மேலாக உடலை ஏற்றி இறக்கி, கடுமையான சவால்களை எதிர்கொண்டு நடித்து வந்த திரைப்படம் 'அமரன்'. சென்னையைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை, ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில், உலக நாயகன் கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். சுமார் 130 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார்.
தலைவரின் வேட்டையன் முதல்.. விக்ரமின் தங்கலான் வரை! நவம்பரை குறிவைத்துள்ள OTT ரிலீஸ் படங்கள்!
Amaran Released in Diwali
தீபாவளியை முன்னிட்டு சுமார் 6000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில், உலகம் முழுவதும் ரிலீசான இப்படம், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு காசிபத்திரி ஆபரேஷனில் வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரிகள் ஒவ்வொருவரின் தேச பக்தியும், வீர மரணமும் திரைப்படம் பார்க்கும் பலரின் மனதையே உலுக்கியது.
Amaran Beat Goat Movie Collection
இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளில், அமரன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.20 முதல் ரூ.23 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், 'கோட்' பட வசூல் சாதனையை அடித்து நொறுக்கி விட்டதாக கூறப்படுகிறது. 'கோட்' திரைப்படம், இரண்டாவது நாளில் தமிழகத்தில் ரூ.22 கோடி மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றும் - நாளையும் விடுமுறை நாட்கள் என்பதாலும், 'அமரன்' திரைப்படம் அணைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி கொண்டிருப்பதாலும், கண்டிப்பாக இப்படம் 500 கோடி வசூல் சாதனையை எட்ட வாய்ப்புள்ளாக திரைப்பட விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.