பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியே செல்வது யார்? நெட்டிசன்கள் கணிப்பு பலிக்குமா!

Published : Nov 02, 2024, 08:03 AM ISTUpdated : Nov 02, 2024, 08:04 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 8, நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற உள்ள போட்டியாளர் யார் என்பதை தற்போது நெட்டிசன்கள் கணித்து கூறி உள்ளனர். அவர் யார்? என்ன காரணம் என்பதை பார்ப்போம்.  

PREV
15
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியே செல்வது யார்? நெட்டிசன்கள் கணிப்பு பலிக்குமா!
Bigg Boss Tamil Season 8

எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்தாலும், கடந்த எட்டு வருடங்களாக ரசிகர்கள் மத்தியில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி.
 

25
Why People Like Bigg Boss Show

இந்த நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் பார்த்து ரசித்த பிரபலங்கள், நிஜத்தில் எப்படி பட்டவர்கள், அவர்களின் குணாதிசயம் என்ன? என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அதேபோல் மக்களின் ஓட்டுகளின் அடிப்படையில் மட்டுமே, உள்ளே இருக்க வேண்டிய போட்டியாளர் யார்? வெளியே செல்ல உள்ள போட்டியாளர் யார் என்பதை நிகழ்ச்சியாளர்கள் முடிவு செய்கின்றனர். எனவே இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பும் தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் ரஞ்சித்துக்கு எம்.ஜி.ஆர் வைத்த உண்மையான பெயர் என்ன தெரியுமா?
 

35
Vijay Sethupathi Anchoring Bigg Boss

2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது வெற்றிகரமாக 2024 ஆண்டை எட்டி உள்ளது. கடந்த ஏழு சீசனாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமலஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த ஆண்டு விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

45
Bigg Boss Tamil Season 8 Contestant

அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ரவீந்தர் சந்திரசேகரன், அருண் பிரசாத், தீபக், சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி, முத்துக்குமரன், அன்ஷிதா, பவித்ரா ஜனனி, ஜாக்குலின், விஜே விஷால், சத்யா, உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். இவர்கள் இருந்து இதுவரை ரவீந்திர சந்திரசேகரன், அர்னவ், தர்ஷா குப்தா, என மூன்று போட்டியாளர்கள் வெளியேறி உள்ள நிலையில் மீதம் 15 போட்டியாளர்கள் அனல் பறக்க விளையாடி வருகின்றனர்.

விஜய் டிவி சீரியல் நடிகை நேகா கவுடாவுக்கு குழந்தை பிறந்தது! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

55
This Week Eviction

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ள நான்காவது போட்டியாளர் யார் என்பதை நெட்டிசன்கள் பக்காவாக கணித்து கூறி வரும் நிலையில், இந்த வாரம் மக்களின் வாக்குகள் அடிப்படையிலும், மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு அடிப்படையிலும் பவித்ரா அல்லது அன்ஷிதா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என கூறி வருகிறார்கள். நெட்டிசன்களின் கணிப்பு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories