விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, ஒரு மாதத்தை எட்ட உள்ள நிலையில்.. போட்டியாளர்களும் தங்களை நிகழ்ச்சியில் நிறுத்திக் கொள்ளவும், மக்கள் மனதில் இடம்பிடிக்கவும், போட்டி போட்டு விளையாடி வருகின்றனர்.
ஆரம்பத்தில் நிகழ்ச்சி சுவாரஸ்யம் இல்லை என பிக்பாஸ் சீசன் 8, ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில், கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் விதவிதமான டாஸ்க்களை கொடுத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றி உள்ளார். சில டாஸ்குகள் கடினமாக இருந்தாலும், அதனை பெண் போட்டியாளர்கள் எதிர்கொள்ளும் விதம் சுவாரஸ்யத்தை உச்சம் என கூறலாம்.