அழகில் அம்மா ஜோவை மிஞ்சிய தியா! வேஷ்டி சட்டையில் தேவ்; சூர்யா குடும்பத்தின் தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்!

Published : Nov 01, 2024, 02:42 PM ISTUpdated : Nov 01, 2024, 02:46 PM IST

சூர்யா - ஜோதிகா ஜோடி, தங்களுடைய பிள்ளைகளுடன் தீபாவளியை கொண்டாடி சிறப்பித்துள்ள போட்டோஸ், தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
16
அழகில் அம்மா ஜோவை மிஞ்சிய தியா! வேஷ்டி சட்டையில் தேவ்; சூர்யா குடும்பத்தின் தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்!
Suriya Jyothika

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்களுடைய மகள் - மகனுடன், இந்த வருட தீபாவளியை கொண்டாடி உள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்கிற அடையாளத்துடன் 'நேருக்கு நேர்' திரைப்படத்தில் அறிமுகமான சூர்யா, அடுத்தடுத்து சில தோல்வி படங்களில் நடித்தாலும், பின்னர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக மாறினார்

 

26
Suriya Jyothika Diwali Celebration

நடிகர் சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால், அது இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'நந்தா' திரைப்படம் தான். இதை தொடர்ந்து, இவர் நடித்த உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி,  சில்லுனு ஒரு காதல், போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

விஜய் டிவி சீரியல் நடிகை நேகா கவுடாவுக்கு குழந்தை பிறந்தது! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

36
Suriya and Jyothika Family Photo

'காக்க காக்க' திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகாவுடன் நடித்த போது இருவருக்கும் இடையே இருந்த நட்பு  காதல் துளிர் விட்டது. பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் இருவரும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகன் உள்ளனர். அஜித்தை போல் முடிந்தவரை, தங்களுடைய குழந்தைகள் மீது கேமராவின் நிழல் படாமல் தவிர்த்து வரும் சூர்யா - ஜோதிகா இருவரும் அவ்வப்போது குடும்ப நிகழ்வுகளின் போது எடுத்து கொள்ளும் புகைப்படங்களை மட்டுமே வெளியிடுகின்றனர்.

46
Suriya and Jyothika Diwali Celebration Old Photo

இந்நிலையில் ஜோதிகா - சூர்யா ஜோடி, இந்த ஆண்டு தங்களுடைய குழந்தைகளுடன் மும்பையின் கொண்டாடியதாக கூறப்படுகிறது பொதுவாக, சூர்யா - ஜோதிகா ஜோடி தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷங்களை சென்னையில் உள்ள சூர்யாவின் பெற்றோருடன் தான் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த முறை மும்பையில் கொண்டாடியதாக கூறப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 3 மாதத்தில் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்? வைரலாகும் பிரக்னன்சி போட்டோஸ்!
 

56
Jyothika Family in Mumbai

கடந்த ஆண்டு சூர்யா - ஜோதிகா ஜோடி தங்களுடைய குழந்தைகளுடன் மும்பையில் குடியேறினர். மும்பையில் செட்டில் ஆன பின்னர், ஜோதிகா தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த சைத்தான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் சூர்யாவும் தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்று நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் சூர்யா தயாரித்த சர்பராஸ் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

66
Diya and Dev Diwali photo

சூர்யா என்ன தான் பாலிவுட் பக்கம் சாய்ந்தாலும், தமிழ் படங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இவர் நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அதே போல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிரதர் - ப்ளடி பெக்கர் ரசிகர்களை சோதித்ததா? வசூலில் சாதித்ததா; முதல் நாள் கலெக்ஷன் விவரம்!
 

Read more Photos on
click me!

Recommended Stories