Published : Nov 01, 2024, 12:47 PM ISTUpdated : Nov 01, 2024, 12:49 PM IST
விஜய் டிவி சீரியல் நடிகை நேகா கவுடா கர்ப்பமாக இருந்த நிலையில், இவருக்கு அக்டோபர் 29-ஆம் தேதி குழந்தை பிறந்ததாக அவரே தீபாவளி முன்னிட்டு தெரிவித்துள்ளார்.
வெள்ளித்திரை நடிகைகளை விட, இல்லத்தரசிகள் மனதில் அதிகம் இடம்பிடிப்பது சின்னத்திரை பிரபலங்கள் தான். காரணம், தினம் தோறும், சீரியல்களை அவர்களை பார்ப்பதால், தங்களை அறியாமலேயே அவர்கள் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவது உண்டு.
25
Neha Gowda Blessed Girl Baby
இதன் காரணமாகவே வெள்ளித்திரை பிரபலங்களுக்கு நிகராக சின்னத்திரை ரசிகர்களும் ரசிக்க படுகிறார்கள். இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாண பரிசு' சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பெங்களூரை சேர்ந்த நடிகை நேகா கவுடா. இந்த சீரியலை தொடர்ந்து, ரோஜா சீரியலிலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார் நேகா கவுடா.
கடந்த 2021-ஆம் ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் சீரியலில், நவீனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
45
Vijay TV serial Actress
இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு சந்தன் கவுடா என்பவரை காதலித்துதிருமணம் செய்து கொண்ட இவர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவ்வப்போது தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்த நேகா, தன்னுடைய வளைகாப்பு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், அக்டோபர் 28-ஆம் தேதி, தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த தகவலை நேகா கவுடா பகிர்ந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகின்றனர். தாயும் - குழந்தையும் நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.