திருமணமான 3 மாதத்தில் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்? வைரலாகும் பிரக்னன்சி போட்டோஸ்!

Published : Nov 01, 2024, 11:48 AM IST

பிரபல மாடலும், நடிகையுமான எமி ஜாக்சன் ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி தன்னுடைய காதலர் எட் வெஸ்ட்விக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.  

PREV
15
திருமணமான 3 மாதத்தில் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்? வைரலாகும் பிரக்னன்சி போட்டோஸ்!

லண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன், தன்னுடைய 17 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து பின்னர் அழகி போட்டியிலும் கலந்து கொண்டார். மிஸ் இங்கிலாந்து போட்டியில் கலந்து கொண்ட எமி ஜாக்சன், இரண்டாவது இடம் பிடித்த இடம் பிடித்தார். 

அந்த சமயத்தில் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய், தான் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படத்தில் நடிக்க வைக்க வெளிநாட்டு பெண் ஒருவரை தேடிக் கொண்டிருந்த நிலையில், எமி ஜாக்சன் பற்றி தெரிந்ததும்,  பின்னர் இவரையே அந்த 'துரையம்மா' கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவனிக்கப்பட்டது.

25

இப்படத்தில் ஒரு அழகிய பொம்மை போல் எமி ஜாக்சன் நடித்திருந்தார். மதராசபட்டினம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் இவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் போட்டி போட்டனர்.

குறிப்பாக தமிழில், தாண்டவம், ஐ, கெத்து, தெறி, தேவி, 2.0, போன்ற படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் வெளியானது. மேலும் சார்ட் என்கிற ஹிந்தி திரைப்படத்திலும் எமி ஜாக்சன் நடித்திருந்தார். ஹாலிவுட் வெப் தொடரான சூப்பர் கேர்ள் வெப் சீரிஸிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பிரதர் - ப்ளடி பெக்கர் ரசிகர்களை சோதித்ததா? வசூலில் சாதித்ததா; முதல் நாள் கலெக்ஷன் விவரம்!
 

35

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு முதல்,  ஜார்ஜ் என்பவருடன், லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் எமி ஜாக்சன் வாழ்ந்த நிலையில், இவர்களுக்கு திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர், இருவரும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில்... திருமணத்திற்கு முன்பே, அதாவது 2021 ஆம் ஆண்டு எமி ஜாக்சன், ஜார்ஜை விட்டு பிரிந்தார்.

45

மேலும் கடந்த இரண்டு வருடங்களாக வருடங்களாக எட் வெஸ்ட்விக் என்கிற ஹாலிவுட் டிவி நடிகருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன், கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் எளிமையான முறையில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்ககள் மத்தியில் நடந்தது. 

ரஜினிகாந்தின் 'லால் சலாம்' வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கிய சிவகார்த்திகேயன்! 'அமரன்' முதல் நாள் வசூல் விவரம்!

55

தற்போது எமி ஜாக்சன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள தகவலை இரண்டாவது கணவர் எட் வெஸ்ட்விக்குடன் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

திருமணமான 3 மாதத்திலேயே 5 மாதம் எமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி, பின்னர் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளது தெரிகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories