Sivakarthikeyan amaran
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தீபாவளி ரேஸில் கலக்கலாக களமிறங்கியுள்ள திரைப்படம் 'அமரன்'. தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தியும், அவருடைய நாட்டு பற்றை பறைசாற்றும் விதமாகவும், எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமாகவும், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்துள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Amaran World Wide Collection
தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியாகி உள்ள தகவலின் படி, அமரன் திரைப்படம் தமிழக அளவில் ரூ.15-ல் இருந்து ரூ.16 கோடி வரை வசூலித்திற்கும் என கூறப்படுகிறது. அதேபோல் உலக அளவில் இப்படம் 28 முதல் 30 கோடி வரை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை படக்குழு 'அமரன்' திரைப்படத்தின் உண்மையான வசூல் குறித்த தகவலை வெளியிடவில்லை.
Sivakarthikeyan and Sai Pallavi
'அமரன்' திரைப்படம் தமிழ்நாட்டில் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் மூலம் மட்டுமே, முதல் நாளில் சுமார் 10 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திரைப்படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், இப்படம் சில தினங்களிலேயே ரூ. 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸை எட்டும் என எதிரிபார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால், வசூலும் அதிகமாகும் என கூறப்படுகிறது.
ஹீரோ மாதிரி தான்பா இருக்காரு; களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம் - காதலருடன் ரம்யா பாண்டியன்!
Amaran Movie Budget and Pre Business
ரூபாய் 130 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'அமரன்' திரைப்படம் ஃப்ரீ ரிலீஸ் பிசினஸில் மற்றும் மட்டுமே சுமார் 65 கோடி லாபத்தை எட்டியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 40 கோடியும், தெலுங்கில் 7 கோடியும், இந்தியாவின் பிற பகுதிகளில் சுமார் 18 கோடியும் ப்ரீ பிசினஸ் மூலம் 'அமரன்' வசூல் செய்துள்ளது. உலக அளவில் சுமார் 6000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.