
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலில் நடித்து வரும் நடிகை கர்ப்பமாக இருப்பதால், சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை சற்று அப்செட் செய்தாலும், பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 வரை சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பான சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'. ஸ்டாலின் முத்து ஹீரோவாக நடித்திருந்த இந்த தொடரில், சுஜிதா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சரவணன் விக்ரம், வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தியாகராஜன், ஷீலா, சாந்தி வில்லியம்ஸ், எஸ்டிபி ரோசரி, டேவிட் சாலமன், ராஜா வெங்கட் சுபா ,ஸ்ரீ வித்யா, உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.
இரண்டே நாளில் தளபதியின் 'Goat' பட வசூல் சாதனையை அடித்து நொறுக்கிய அமரன்!
இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, விஜய் டிவியில் இந்த தொடரின் இரண்டாவது பாகம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும், கதைக்களமே அடியோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில், ஸ்டாலின் மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுக்கு அப்பாவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிக்க, ராஜ்குமார் மனோகரன், வி ஜே சரண்யா துரடி, ஹேமா ராஜ்குமார், ஆகாஷ் பிரேம்குமார், ஷாலினி, சத்யா சாய், விலாசினி ,உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 250 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை, ஐ டேவிட் என்பவர் இயக்கி வருகிறார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் டல்லடித்தாலும், இந்த தொடர் கடந்த சில மாதங்களாக டிஆர்பி-யில் பாக்யலட்சுமி சீரியலை முந்தியுள்ளது. இந்நிலையில் 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலில் நடித்து வரும் ஷாலினி விலக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து, எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கதாநாயகி' என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருபவர் ஷாலினி. சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்கிற ஆர்வம் இவருக்கு இருந்த நிலையில், இளம் வயதிலேயே இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனர். திருமணத்திற்கு பின்னர், ஷாலினியின் கனவை நிறைவேற்ற நினைத்த அவரது கணவர், ஷாலினி நடிக்க வேண்டும் என்கிற கனவுக்கு உறுதுணையாக இருந்து, உயிர் கொடுத்தார். இவருடைய கணவர், மாமியார் மாமனார், என அனைவருமே ஷாலினியின் ஆசைக்கு மரியாதை கொடுத்து அவர் நடிக்க சுதந்திரம் கொடுத்தனர்.
தலைவரின் வேட்டையன் முதல்.. விக்ரமின் தங்கலான் வரை! நவம்பரை குறிவைத்துள்ள OTT ரிலீஸ் படங்கள்!
'கதாநாயகி' நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ஷாலினி, டைட்டிலை தவற விட்டாலும், முதல் ரன்னர் அப்பாக மாறி 3 லட்சம் பரிசு தொகையை வென்றார். இதை தொடர்ந்து விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலில் ராஜி கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ராஜி கதாபாத்திரத்தில், தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஷாலினி, தற்போது கர்ப்பமாக உள்ளதாகவும் இதன் காரணமாக சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஷாலினி தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சற்று சந்தேகத்தை எழுப்பி உள்ளது. எனினும் ரசிகர்கள் ஷாலினிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.