MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குட் நியூஸ் சொன்ன கையேடு.. 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலை விட்டு விலகும் நடிகை?

குட் நியூஸ் சொன்ன கையேடு.. 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலை விட்டு விலகும் நடிகை?

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் கதாநாயகிகளில் ஒருவர் தற்போது கர்ப்பமாக, உள்ளதாகவும்  சீரியலை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 02 2024, 12:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Store

Pandian Store

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலில் நடித்து வரும் நடிகை கர்ப்பமாக இருப்பதால், சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை சற்று அப்செட் செய்தாலும், பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

25
Pandian Store 2 serial

Pandian Store 2 serial

விஜய் டிவியில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 வரை சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல்  ஒளிபரப்பான சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'. ஸ்டாலின் முத்து ஹீரோவாக நடித்திருந்த இந்த தொடரில், சுஜிதா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சரவணன் விக்ரம், வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தியாகராஜன், ஷீலா, சாந்தி வில்லியம்ஸ், எஸ்டிபி ரோசரி, டேவிட் சாலமன், ராஜா வெங்கட் சுபா ,ஸ்ரீ வித்யா, உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.

இரண்டே நாளில் தளபதியின் 'Goat' பட வசூல் சாதனையை அடித்து நொறுக்கிய அமரன்!

35
Pandian Store 2 serial Story

Pandian Store 2 serial Story

இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, விஜய் டிவியில் இந்த தொடரின் இரண்டாவது பாகம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும், கதைக்களமே அடியோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில், ஸ்டாலின் மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுக்கு அப்பாவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிக்க, ராஜ்குமார் மனோகரன், வி ஜே சரண்யா துரடி, ஹேமா ராஜ்குமார், ஆகாஷ் பிரேம்குமார், ஷாலினி, சத்யா சாய், விலாசினி ,உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 250 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை, ஐ டேவிட் என்பவர் இயக்கி வருகிறார்.

45
Shalini Quit serial

Shalini Quit serial

ஆரம்பத்தில் கொஞ்சம் டல்லடித்தாலும், இந்த தொடர் கடந்த சில மாதங்களாக டிஆர்பி-யில் பாக்யலட்சுமி சீரியலை முந்தியுள்ளது. இந்நிலையில் 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலில் நடித்து வரும் ஷாலினி விலக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து, எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கதாநாயகி' என்கிற ரியாலிட்டி  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருபவர் ஷாலினி. சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்கிற ஆர்வம் இவருக்கு இருந்த நிலையில், இளம் வயதிலேயே இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனர். திருமணத்திற்கு பின்னர், ஷாலினியின் கனவை நிறைவேற்ற நினைத்த அவரது கணவர், ஷாலினி நடிக்க வேண்டும் என்கிற கனவுக்கு உறுதுணையாக இருந்து, உயிர் கொடுத்தார். இவருடைய கணவர், மாமியார் மாமனார், என அனைவருமே ஷாலினியின் ஆசைக்கு மரியாதை கொடுத்து அவர் நடிக்க சுதந்திரம் கொடுத்தனர்.

தலைவரின் வேட்டையன் முதல்.. விக்ரமின் தங்கலான் வரை! நவம்பரை குறிவைத்துள்ள OTT ரிலீஸ் படங்கள்!

55
Vijay Tv serial Actress Shalini Pregnant

Vijay Tv serial Actress Shalini Pregnant

'கதாநாயகி' நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ஷாலினி, டைட்டிலை தவற விட்டாலும், முதல் ரன்னர் அப்பாக மாறி 3 லட்சம் பரிசு தொகையை வென்றார். இதை தொடர்ந்து விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலில் ராஜி கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ராஜி கதாபாத்திரத்தில், தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஷாலினி, தற்போது கர்ப்பமாக உள்ளதாகவும் இதன் காரணமாக சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஷாலினி தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சற்று சந்தேகத்தை எழுப்பி உள்ளது. எனினும்  ரசிகர்கள் ஷாலினிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தங்கமயில் இருக்கும் நேரம் பார்த்து அஞ்சலியோடு கோவிலுக்கு வந்த சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
திரிஷா ரசிகர்களுக்கு காத்திருக்கும் செமத்தியான ட்ரீட்! சர்ச்சைகளை தாண்டி சாதிக்கும் 'எவர் கிரீன்' நாயகி! என்ன சேதி தெரியுமா?
Recommended image3
சமையல் செய்து சினிமா கத்துக்கிட்ட கரகாட்டகாரன் பட இயக்குனர்.! அஜித் பிரியாணியை ஓரங்கட்டும் கங்கை அமரன் "டிஷ்" எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved