ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் கூட டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து மிரட்டிய 5 நடிகர்கள்!

First Published | Oct 18, 2024, 4:38 PM IST

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட 5 முன்னணி நடிகர்கள், தங்களுடைய ஸ்டண்ட் காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக டூப் இல்லாமல், ரிஸ்க் எடுத்து நடித்துள்ளனர். அப்படி அவர்கள் நடித்த சில காட்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
 

Murattu Kaalai Movie

இன்று 70 வயதை தொட்டுவிட்ட காரணத்தால், பல ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளை டூப் போட்டு நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆரம்ப காலங்களில் எவ்வளவு கஷ்டமான காட்சி என்றாலும் டூப் இல்லாமல் நடித்தவர். குறிப்பாக 'முரட்டுக்காளை' படத்தில் வரும் ட்ரெயின் சண்டைக் காட்சி பார்க்கவே மிரட்டல் ஆக இருக்கும். ஓடும் ரயிலில் ரஜினிகாந்த் பறந்து பறந்து வில்லன்களை வெளுத்து வாங்கி இருப்பார்.

இந்த காட்சியை தென்காசி ரயில்வே ஸ்டேஷனில், காலையில் ஒரு ட்ரெயினும் மாலையில் ஒரு ட்ரெயினும் சென்ற பின்னர் இடைப்பட்ட நேரத்தில் தான் இந்த காட்சியை படமாக்கி உள்ளனர். இந்த காட்சிக்காக 5 லட்சம் செலவு செய்து ஒரு டிரெயினையே வாடகைக்கு எடுத்து, இந்த காட்சியை படமாக்கியுள்ளார் இயக்குனர். முதலில் சண்டைக் காட்சி முழுவதும் லாங் ஷாட்டில் டூப் வைத்து எடுத்து விட்டு க்லோசப் ஷாட்டில் ரஜினிகாந்த் வைத்து ஷூட் செய்ய பிளான் செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இந்த ஸ்டண்காட்சியை எந்த ஒரு டூப்பும் இல்லாமல் தானே நடிப்பதாக அடம் பிடித்து நடித்துள்ளார்.

Rajinikanth Stunt

எந்திரன் படத்தில், பல சீன்கள் டூப் போட்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும், கார் சேசிங் சீனில் உள்ள போர்ஷன்ஸ் எல்லாம் ரஜினிகாந்த் எந்த ஒரு டூப்பும் இல்லாமல் நடித்துள்ளார். அந்த ஒரு காட்சியை பார்க்க படு மிரட்டலாக இருக்கும்.

எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை.. இனி உங்களுக்கு பாட்டே எழுத முடியாது; வாலியின் தரமான சம்பவம்!

Tap to resize

Virumandi

சினிமாவில் அறிமுகமான காலத்தில் இருந்து, சுமார் 60 வருடங்களுக்கு மேலாக, தன்னுடைய சினிமா கலைக்காக எந்த ஒரு ரிஸ்கையும் அசால்டாக எடுத்து வரும் உலக நாயகன் கமலஹாசன், ஜல்லிக்கட்டு காட்சிகளில் கூட எந்த ஒரு டூப்பும் இல்லாமல் நடித்தவர். எத்தனையோ படங்களில் ஜல்லிக்கட்டு சீனை மையப்படுத்திய காட்சிகள் படமாக்க பட்டிருந்தாலும், ஜல்லிக்கட்டு காளைகளை காட்டிவிட்டு அவை பெரும்பாலும் டூப் வைத்தே படமாக்கப்படும். ஆனால் முதல் முறையாக ஜல்லிக்கட்டு காளையை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் அது விருமாண்டி படம் தான்.

வெள்ளியங்கிரி பகுதியில் உள்ள கோசாலாவில் வளர்க்கப்பட்ட நிஜ காளையை தான் கமல்ஹாசன் அடக்குவது போல் நடித்திருந்தார். கமலஹாசன் எந்த ஒரு டூப்பும் இல்லாமல் நடித்த இந்த படத்தில், உண்மையான ஜல்லிக்கட்டு அட்மாஸ்பியரை கொண்டுவர வேண்டும் என்பதற்காக 200 காளைகளையும், 200  மாடுபிடி வீரர்களையும், பொதுமக்களையும் வைத்து இயக்கி - நடித்திருந்தார் கமல்ஹாசன். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களே சில சமயங்களில் மாடுகளை அடக்க திணறுவது உண்டு, அப்படி இருக்கும்போது ஒரே ஒரு சீனுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து கமலஹாசன் நடித்திருந்தார்.

Aalavandhan

இவர் மாட்டை அடுக்கும் காட்சியில் நடித்தபோது, மாடு குத்தி கையில் பலமான காயம் ஏற்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வரவைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கமலஹாசனுக்கு 10 தையலுக்கு மேல் போடப்பட்டுள்ளது. விருமாண்டி படத்தில் மிகப்பெரிய அளவில் இந்த காட்சி பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படங்களில் ஒன்று 'ஆளவந்தான்'. பொதுவாக தமிழ் சினிமாவில் டபுள் ஆக்சன் காட்சிகளை கொண்டு எடுக்கப்படும் படங்களில் இன்னொரு கேரக்டருக்கு டூப் நடிகரை வைத்து எடுத்துவிட்டு, பின்னர் எடிட்டிங் மூலம் மாற்றப்படுவது வழக்கம். ஆனால் ஆளவந்தான் படத்தில், இரண்டு கதாபாத்திரங்களுமே உலக நாயகன் கமலஹாசன் தான் நடித்திருந்தார். முதலில் ஆர்மி ஆபிசர் கதாபாத்திரத்தில் நடித்த கமலஹாசனின் போர்ஷன் ஷூட் பண்ணிவிட்டு ,நந்து கேரக்டருக்காக இரண்டு மாசம் எடுத்துக் கொண்டு தன்னுடைய வெயிட்டை ஏற்றி கமலஹாசன் மீண்டும் முன்பு எடுக்கப்பட்ட காட்சிகளில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளரை கழட்டி விட்டுட்டு.. ஜோடியாக நடித்த நடிகருக்கு கழுத்தை நீட்டப்போகும் விஜய் டிவி சீரியல் நடிகை!

Kamalhaasan Movie

இரண்டு கமலுக்கும் நடக்கக்கூடிய ஃபைட் சீன்ஸ் எல்லாம் மீண்டும் கிரியேட் செய்திருந்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.  இந்த படத்தில் ஆர்மி ஆபீஸராக இருக்கும் கமல்ஹாசன் உண்மையாகவே டெல்லியில் ராணுவத்தினர் பயிற்சி எடுக்கும் இடத்திற்கு சென்று பயிற்சி எடுத்து தான் நடித்திருந்தார். இது போன்ற காட்சிகள் எல்லாமே படத்திலும் காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக இந்த படத்தில் ஒரு காட்சியில் கமாண்டோ ஒருவர் கமலஹாசனுக்கு மெடல் குத்துவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அவர் டெல்லியில் கமாண்டோ சீப் ஆபிஸராக இருந்தவர். கமல்ஹாசனுக்கு அந்த மெடலை குத்தும் போது, நீ உண்மையாகவே ஒரு ஆர்மி ஆபீஸருக்கான எல்லா பயிற்சிகளையும் எடுத்திருக்கிறாய் எனவே இந்த மெடலை நான் உனக்கு மனசார குத்துகிறேன் என கூறி தான் அந்த மெடலை குத்தினாராம். ஒரு கமாண்டோ மூன்று வருஷம், நான்கு வருஷம் செய்யும்  பயிற்சிகளைஎல்லாம் கமலஹாசன் சில மாதத்தில் செய்து முடித்தார். இது மிகப்பெரிய அதிசயம் என்று கூறப்பட்டது.

'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் கமலஹாசன் ஒரு டிரக்கில் தொங்கிக்கொண்டு சண்டை போடும் காட்சியில் கூட எந்த ஒரு டூப்பும் இல்லாமல்... டிரக் கதவில் தொங்கியபடி ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார். 

Kamalhaasan

ஸ்டாண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கும் நடிகர்கள் கூட கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே குதிப்பது போன்ற காட்சிகளை எல்லாம் டூப் போட்டு தான் நடிப்பார்கள். ஆனால் கமலஹாசன் இது போன்ற காட்சிகளை கூட அவரே தான் நடித்துள்ளார். 'சகலகலா வல்லவன்' படத்தில் கமல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, உள்ளே வரும் காட்சியில் நடித்த போது அவருக்கு கண்ணாடி முகத்தில் குத்தி ரத்தம் வடிந்துள்ளது. முகத்தில் தையல் போட்டால் அது மாறாத வடுவாக இருக்கும் என்பதால், வாணி ராமகிருஷ்ணன் என்கிற பிளாஸ்டிக் சர்ஜனிடம் சென்று அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதாக  இயக்குனர்  எஸ் பி முத்துராமன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் காக்கி சட்டை படத்தில் ஓடும் லாரியில் நடக்கும் ஃபைட் சீன்,  சத்யா படத்தில் இருக்கும் ரிஸ்கி ஜம்ப், தசாவதாரம், அவ்வை சண்முகி, என பல படங்களில் இருக்கும் பைட் சீசன் மற்றும் பைக் சேசிங், கார் சேசிங் காட்சியில் தற்போது வரை டூப் இல்லாமல் கலக்கி கொண்டிருக்கிறார் கமல். இப்படி நடிக்கும் போது கமல்ஹாசனுக்கு பலமுறை அடிபட்டிருந்தாலும் அவர் ஒருமுறை கூட இதனை வெளிப்படுத்தியதே இல்லை. 

விஜய் டிவியில் மற்றும் ஜீ தமிழ் ஹிட் சீரியல்கள் எட்டிய புதிய மையில் கல்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
 

Suriya Stunts

கஜினி படத்தில் நடிகர் சூர்யா அமினிஷியா பேஷண்டாக நடிக்க வேண்டும் என்பதற்காக, சில வாரங்கள் அமினிஷியா பாதிப்பு உள்ளவர்களுடன் தங்கு இருந்து அவர்களின் குணாதிசயங்களை நோட் செய்து இந்த படத்தில் நடித்துள்ளார். அதே போல் கஜினி படத்தில் ஒரு மிகப்பெரிய ஷெட்டில் இருந்து சூர்யா விழுவது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியை டூப் வைத்தே எடுத்துக் கொள்ளலாம் என, ஏ ஆர் முருகதாஸ் கூறியபோதும் சூர்யா ரிஸ்க் எடுத்து அவரே குதித்தார். அவர் கீழே விழும்போது முட்டியில் பலமாக அடிபட்டு சுமார் நான்கு மாதங்கள் நடக்க முடியாமல் இருந்தார்.

'காக்க காக்க' படத்தில் சூர்யா வீட்டை உடைத்துக் கொண்டு தண்ணீரில் விழுவது போல் ஒரு காட்சி இருக்கும்.  விடிய காலையில், ஐஸ் போல் இருக்கும் தண்ணீரில் விழ வேண்டும் என்பதால் ஆரம்பத்தில் இதை டூப் போட்டு எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது ஆனால் சூர்யா இந்த காட்சியை சுமார் 5 முறை ரீடேக் எடுத்து நடித்துள்ளார்.

அயன் படத்தில் இடம்பெறும் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்துமே சூர்யா எந்த ஒரு டூப்பும் இல்லாமல் நடித்த காட்சிகள் தான். அதேபோல் 24 படத்தில் இடம்பெறும் ட்ரெயினில் இருந்து குதிக்கும் காட்சிக்கும் சூர்யா டூப் பயன்படுத்தாமல் 150 அடி உயரத்தில் இருந்து குதித்து நடித்தார்.

Thalapathy Vijay Risky Stunt

தளபதி விஜய், தன்னுடைய தந்தையின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தாலும்... இவருடைய அசுர வளர்ச்சிக்கு இவருடைய உழைப்பும் ஒரு முக்கிய காரணம். பல படங்களில் விஜய் மெனக்கெட்டு நடிப்பது வெளியில் தெரியாமலே போய்விடுகிறது. குறிப்பாக வேலாயுதம் படத்தில், 150 அடி பிரிட்ஜ் மேல் மூவிங் ட்ரெயினில் நடக்கும் சண்டை காட்சியை டூப் வைத்து எடுத்து கொள்ளலாம் என இயக்குனர் மோகன் ராஜா கூறியபோதும்,  விஜய் டூப் மேன் எடுக்கிற அதே ரிஸ்கை நான் எடுத்தால் என்ன? என்று முழுக்க முழுக்க இந்த பைட் சீனை அவரே நடித்துள்ளார். இந்த காட்சியை படமாக்கி முடிப்பதற்குள் தங்களுக்கு உயிரே இல்லை என மோகன் ராஜன் கூறி இருந்தார்.

பத்ரி படத்திற்காக விஜய் செய்த அனைத்து ஸ்டண்ட் காட்சிகளும் டூப் இல்லாமல் செய்தது தான். இதுகுறித்த மேக்கிங் வீடியோ படத்தின் கடைசி காட்சியில் இடம்பெற்றிருக்கும்.  தெறி படத்திலும் தண்ணிக்குள் விஜய் குதிக்கும் காட்சி எந்த ஒரு டூப்பும் இல்லமல் எடுக்கப்பட்டது. இது போல் பல காட்சிகளில் விஜய் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

பிக்பாஸில் இப்படியும் நடக்கிறதா? ரஞ்சித் மனைவி பிரியா ராமன் கூறிய பகீர் தகவல்கள்!

Ajith Kumar Dangerous Stunt

தல அஜித் 'ஆரம்பம்' படத்தில் நடிக்கும் போது, கார் மீது விழுவது போல் ஒரு ஸ்டண்ட் காட்சியை படமாக்கி இருப்பார்கள்.  இந்த காட்சியில் அஜித் டூப் இல்லாமல் நடித்தபோது அவருக்கு காலில் பயங்கரமாக அடிபட்டு அன்றைய தினமே மருத்துவமனைக்கு சென்று ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டு, பின்னர் மறுநாள் அதே காட்சியில் நடித்தாராம். ஆரம்பம் படத்தில் வரும் போர்ட் சீனிலும் அஜித்தே போர்ட் ஓட்டுவதை கற்றுக்கொண்டு, மிகவும் தத்ரூபமாக தன்னுடைய ஸ்டாண்ட் காட்சிகளில் நடித்திருப்பார்.

வீரம் படத்தில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ரயிலில் இருந்து தொங்கியபடி அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி வேற லெவல் இருந்தது. இந்த காட்சி ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக படக்குழு எவ்வளவோ சொல்லிலும் அஜித் அந்த காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்தார். விவேகம் படத்திலும் தல அஜித் நடித்த ஸ்டண்ட் காட்சிகள் டூப் இல்லாமல் எடுக்கப்பட்டவை.  'பில்லா' படத்தில் அஜித் ஒரு ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நடித்திருப்பார். இந்த காட்சிக்காக தன்னுடைய உயிரையே பணயம் வைத்து அஜித் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!