Vaali
'ஏஜ் இஸ் ஜஸ்ட் ஏ நம்பர்', என்பதை தன்னுடைய பல பாடல்களில் நிரூபித்தவர் தான் கவிஞர் வாலி. குறிப்பாக சுமார் 3 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதிய வாலி, காலத்திற்கு ஏற்ற போல், தன்னுடைய பாடல் வரிகளை அப்டேட் செய்தவர். 80 வயதில் கூட இவர் எழுதிய பல பாடல்கள் இளம் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்தன. இயக்குனர் ஷங்கர், மணிரத்னம் முதல் கொண்டு பல முன்னணி இயக்குனர்கள் இவர் தங்களின் படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என, ஒரு மாதம் கூட காத்திருந்து இவரிடம் பாடல்களை வாங்கியுள்ளனர்.
MGR Movie
தமிழ் சினிமாவில் சுமார் 15,000 மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள வாலி,1958-ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர் கோபியின் உதவியோடு சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடி அலைந்த போது... சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பல துயரங்களை அனுபவித்தவர். பின்னர் 1959-ல் வெளியான 'அழகர்மலை காவலன்' படத்தில் இவர் எழுதிய பாடல் பெரிதாக பேசப்படாத நிலையில், சரியான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அடுத்தடுத்து சந்திரகாத், நல்லவன் வாழ்வான், இதயத்தில் தீ போன்ற பாடல்களை வாலி எழுதிய போதும்... எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், எம்.ஜி.ஆரின் படகோட்டி படத்தில் எழுதிய பாடல்கள் தான் இவரை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பிரபலப்படுத்தியது
தயாரிப்பாளரை கழட்டி விட்டுட்டு.. ஜோடியாக நடித்த நடிகருக்கு கழுத்தை நீட்டப்போகும் விஜய் டிவி சீரியல் நடிகை!
Vaali and MGR Songs
குறிப்பாக 'தொட்டால் பூ மலரும், தொடாமல் நான் மலர்ந்தேன் பாடல்' இந்த பாடலை கேட்டதுமே எம்.ஜி.ஆருக்கு பிடித்து விட்டது. இந்த பாடலை எழுதியது கண்ணதாசனா? என கேட்க, இல்லை வாலி என்கிற புதிய பையன் என அவர் சொன்னார். இனி என்னுடைய படங்களுக்கு அவரையே நிறைய பாடல்கள் எழுத சொல்லுங்கள் என கூறினார். வாலி, எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்கள் எழுதும் போது, நெற்றி நிறைய விபூதி மற்றும் குங்குமம் வைத்திருந்தாராம்.
Poet vaali
இதை பார்த்த எம்.ஜி.ஆர் என்னுடைய படங்களுக்கு பாடல் எழுத வரும் போது.. இந்த பட்டை - பொட்டு எல்லாம் வைத்து வரவேண்டாம் என கூறியுள்ளார். இதை கேட்ட வாலிக்கு மிகுந்த கோவம் வந்துவிட்டது. பொதுவாக எம்.ஜி.ஆர் திட்டினால் கூட நம் மீது உள்ள அன்பு மிகுதியால் தான் திட்டுகிறார் என வாங்கி கொள்ளும் வாலி, இவர் இப்படி சொன்னதும், இந்த பட்டை - பொட்டு இல்லாமல் தான் நான் பாட்டு எழுத வேண்டும் என்றால், இனி நான் உங்களுக்கு பாட்டு எழுத மாட்டேன் என கூறிவிட்டாராம்.
இவர் தான் காரணமா? தனுஷுடன் மீண்டும் இணைகிறாரா ஐஸ்வர்யா? விரைவில் வருகிறதாம் குட் நியூஸ்!
MG Ramachandran
பின்னர் எம்.ஜி.ஆர் இது வாலியின் விருப்பம் மற்றும் அவரின் நம்பிக்கை. அப்படி சொல்லி இருந்திருக்க கூடாது என்பது புரிந்து கொண்டு... உன்னுடைய இஷ்டம் போலவே பட்டையோடு வந்து எனக்கு பாட்டு எழுது, என சொன்னாராம். இதன் மூலம் நியாயமான விஷயங்களை நாம் எதிர்த்தால் அது ஒருவரை சிந்திக்க வைக்கும் என்பதை புரிய வைத்துள்ளார் வாலி என்பது குறிப்பிடத்தக்கது.