முதல் படத்திலேயே தன்னுடைய துறுதுறு நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த ஜோதிகா, பின்னர் கோலிவுட்டின் பிசியான ஹீரோயினாக உருவெடுத்தார். இதையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டுப்பார், விஜய்யுடன் குஷி, விக்ரம் ஜோடியாக தூள் என அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் ஹிட்டானதால் ஜோதிகாவுக்கு மவுசு அதிகரித்தது.