பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் பெட்டி படுக்கையோடு எலிமினேட் ஆகப்போவது இவரா?

Bigg Boss Tamil Elimination : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆக உள்ள போட்டியாளர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை நடந்து முடிந்த 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இம்முறை பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் நடந்த எலிமினேஷனில் குறைவான வாக்குகளை பெற்ற ரவீந்தர் சந்திரசேகர் எலிமினேட் ஆனார்.

Bigg Boss Tamil Contestants

தற்போது பிக்பாஸ் வீட்டில் அர்னவ், முத்துக்குமரன், கானா ஜெஃப்ரி, அருண் பிரசாத், சத்யா, தீபக், ரஞ்சித், விஜே விஷால், பவித்ரா, ஆர்.ஜே.ஆனந்தி, சுனிதா, தர்ஷிகா, சாச்சனா, ஜாக்குலின், செளந்தர்யா, தர்ஷா குப்தா, அன்ஷிதா ஆகிய 17 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களில் இந்த வார கேப்டனாக சத்யா தேர்வானதால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்தார். இதையடுத்து போட்டியாளர்கள் தேர்வு செய்ததில் மொத்தம் 10 போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... மக்கள் செல்வனுக்கு மவுசு இல்லையா! அதளபாதாளத்துக்கு சென்ற பிக்பாஸ் டிஆர்பி; சீரியலை விட கம்மியாம்


Darsha Gupta

நாமினேஷனில் உள்ள விஜே விஷால், தர்ஷா குப்தா, செளந்தர்யா, ரஞ்சித், கானா ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ், சாச்சனா ஆகிய 10 போட்டியாளர்களில் இந்த வாரம் ஒருவர் எலிமினேட் ஆக உள்ளார். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரே எலிமினேட் ஆவார் என்பதால் இந்த வார எவிக்‌ஷனுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதன்படி டேஞ்சர் ஜோனில் உள்ள போட்டியாளர்கள் பற்றி பார்க்கலாம்.

Arnav

இந்த வார நாமினேஷனில் உள்ளவர்களில் விஜே விஷால் மற்றும் செளந்தர்யாவுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக முத்துக்குமரன், ரஞ்சித், ஜெஃப்ரி, தீபக், ஜாக்குலின், சாச்சனா ஆகியோரும் முன்னிலையில் உள்ளதால் அவர்களும் எலிமினேட் ஆக வாய்ப்புகள் குறைவு. இந்த பட்டியலில் கம்மியான வாக்குகளுடன் கடைசி இரண்டு இடத்தில் இருப்பது அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா தான். இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் இப்படியும் நடக்கிறதா? ரஞ்சித் மனைவி பிரியா ராமன் கூறிய பகீர் தகவல்கள்!

Latest Videos

click me!