Harris Jayaraj Song Secret : இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒரு பாடலுக்கு இசையமைக்க அதற்கான இசைக்கருவியை தேடி தெருத் தெருவாக அழைந்த சம்பவத்தை பார்க்கலாம்.
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் கோலோச்சிய ஒரு இசையமைப்பாளர் என்றால் அது ஹாரிஸ் ஜெயராஜ் தான். மின்னலே படத்தில் தொடங்கிய ஹாரிஸின் இசைப்பயணம், 20 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இன்று பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் மக்காமிஷி பாடலை இசையமைத்ததும் ஹாரிஸ் ஜெயராஜ் தான். இப்படி தமிழில் எக்கச்சக்கமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ், ஒரு பாடலுக்காக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.
25
Harris Jayaraj songs
நடிகர் சூர்யா முதன்முதலில் அதிக பட்ஜெட்டில் நடித்த படம் 7ஆம் அறிவு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் ஹைலைட்டாக இருந்ததே சூர்யா நடித்த போதிதர்மர் கதாபாத்திரம் தான். இப்படத்தில் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சீன மக்களை போதிதர்மர் காப்பாற்றும்படியான காட்சி இடம்பெற்று இருக்கும். அதற்காக ரைஸ் ஆஃப் டாமோ என்கிற பாடலை கம்போஸ் செய்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.
இந்தப்பாடலுக்காக அவர் தெருத்தெருவாக அழைந்திருக்கிறார். போதிதர்மர் 6ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதால், அதற்காக அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை கொண்டு இசையமைக்க முடிவு செய்த ஹாரிஸ் ஜெயராஜ், அதை வாங்குவதற்காக சீனா கிளம்பி சென்றிருக்கிறார். அங்கு தெருத்தெருவாக அழைந்து திரிந்தும் அவருக்கு அந்த இசைக்கருவி கிட்டவில்லையாம். இறுதியாக பழைய இசைக்கருவிகளை ஏலம் விடும் இடம்பற்றி ஹாரிஸுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
45
music Instruments
அந்த ஏலம் விடும் இடத்தை கண்டுபிடிக்க சுமார் 11 கிலோமீட்டர் நடந்தே சென்றாராம் ஹாரிஸ். ஒருவழியாக அங்கு சென்று பார்த்தால் அந்த இசைக்கருவிகளை வாங்க கடும் போட்டி இருந்ததாம். அந்த ஏலத்தில் தான் விரும்பிய ருவான், குல்சான், கோட்டு ஆகிய இசைக்கருவிகள் எல்லாம் வாங்கிவிட்டு சென்னைக்கு பார்சல் செய்து கொண்டு வந்த ஹாரிஸ் ஜெயராஜுக்கு அங்கு தான் ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது.
55
Harris Jayaraj with musician
அந்த இசைக்கருவிகளை வாங்கி வந்தாலும் அதை யாரை வைத்து வாசிக்க வைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போன ஹாரிஸ், பின்னர் தன்னிடம் வீணை வாசிக்கும் கலைஞரிடம் அந்த இசைக்கருவிகளை கொடுத்து சில மாதங்கள் அதை வாசிக்க கற்றுக்கொள்ளுமாரு சொன்னாராம். பின்னர் அந்த இசைக்கலைஞர் அந்த இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டு வாசித்தது தான் ரைஸ் ஆஃப் டாமோ பாடலின் இசை. அவர் இவ்வளவு மெனக்கெட்டதற்கு ஒர்த் ஆக அந்த பாடலின் இசை மிகவும் தனித்துவமாக இருக்கும். போதிதர்மன் காலத்தில் இருந்த இசைக்கருவிகளை வைத்து போதிதர்மனுக்கே மியூசிக் போட்ட பெருமை ஹாரிஸ் ஜெயராஜையே சேரும்.