வாலிக்கு பாராட்டு விழா ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதில் இளையராஜா, கமலஹாசன், கிரேசி மோகன் உள்ளிட்ட பலரும் நேரில் கலந்துகொண்டு வாலியை வாழ்த்தினர். அப்போது கண்ணதாசன் குறித்து பேசிய வாலி, "நானும் அவரும் தொழில் ரீதியாக எதிரெதிரே கடை விரித்தவர்கள் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் எங்களுடைய இந்த நட்பு தற்கால பாடல் ஆசிரியர்கள் மத்தியில் இருக்கிறதா என்றால் அது நிச்சயம் சந்தேகம். கண்ணதாசன் ஒரு முறை, நான் இறந்து விட்டால் எனக்கான இறப்பு பாடலை நீ தான் எழுத வேண்டும் வாலி என்று உரிமையோடு என்னிடம் கேட்டுக் கொண்டார்".
"அவருடைய வாக்கு பலித்தது, அவர் என்னிடம் சொன்ன வெகு சில மாதங்களில் அவர் உயிரிழந்தார். அவருக்காக ஒரு இரங்கல் கவியரங்கம் நடத்தப்பட்டது. அப்போது அந்த கவியரங்கில் பேச மொழிகள் இல்லாமல் தவித்து நின்றேன். அப்போது படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். இவ்வளவு அழகிய கவிதை புத்தகத்தை கிழித்தெறிந்து விட்டான்" என்று எமனை திட்டி சில வரிகள் சொன்னேன்" என்று கூறினார் வாலி.
விஜய் டிவியில் மற்றும் ஜீ தமிழ் ஹிட் சீரியல்கள் எட்டிய புதிய மையில் கல்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!