MS Viswanathan
தமிழ் சினிமாவை பொருத்தவரை இன்று இசைஞானி இளையராஜா எந்த அளவிற்கு அனைவராலும் ரசிக்கப்படுகின்றாரோ? அதைவிட சற்று கூடுதலாகவே மக்களால் இன்றளவும் ரசிக்கப்பட்டு வரும் ஒரு மாமேதை தான் எம்.எஸ் விஸ்வநாதன். இந்திய திரை உலகின் மிக மூத்த மற்றும் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். சுமார் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 7500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். திரை இசை பாடல்கள் மட்டுமல்லாமல், பக்தி பாடல்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், தனியார் நிறுவன விளம்பரங்கள், இசை ஆல்பங்கள் என்று பல வகையில் தன்னுடைய இசை திறமையை தமிழகமெங்கும் பரவச் செய்தவர் எம்.எஸ் விஸ்வநாதன் என்றால் அது மிகையல்ல. டி.கே ராமமூர்த்தியோடு இணைந்து சுமார் 15 ஆண்டு காலம் பயணித்த விஸ்வநாதன், அதற்குப் பிறகு 2015ம் ஆண்டு வரை சுமார் 700 படங்களில் தனியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் மற்றும் ஜீ தமிழ் ஹிட் சீரியல்கள் எட்டிய புதிய மையில் கல்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
MSV and MGR
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெமினி கணேசன் என்று பல டாப் நடிகர்கள் புகழில் உச்சிக்கே செல்ல மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன் என்றால் அது மிகையல்ல. இது மட்டுமல்ல தமிழ் திரையுலகை பொருத்தவரை கடந்த 1965ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரை பெரிய அளவில் சம்பளம் வாங்கிய ஒரே இசையமைப்பாளராக திகழ்ந்தவர் இவர். வெஸ்டர்ன், இந்திய கர்நாடகம், ஹிந்துஸ்தானி மற்றும் கசல் என்று தன்னுடைய இசையால் பல உச்சங்களை தொட்டவர் எம்.எஸ் விஸ்வநாதன்.
என்னதான் புகழின் உச்சியில் பயணித்து வந்தாலும், மிகவும் எளிமையாகவும் தன்னடக்கத்தோடும் நடந்து வந்த எம்.எஸ் விஸ்வநாதனையே எம்ஜிஆர் ஒருமுறை விளையாட்டாக சீண்டிய விஷயமும் நடந்திருக்கிறது.
Actor Asokhan
கடந்த 1974 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் நீலகண்டன் இயக்கத்தில், எம்ஜிஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "நேற்று இன்று நாளை". இந்த திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால் பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகச்சிறந்த வில்லனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் அசோகன் தயாரிப்பாளராக பணியாற்றிய படங்களில் இதுவும் ஒன்று. அசோகனை பொருத்தவரை திருச்சியில் பிறந்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய புகழோடு வளம் வந்து, 50 வயதிலேயே காலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவருடைய நடிப்புக்கு இணை அவரே என்று சொல்லும் அளவிற்கு, மிக நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துபவர். இந்த சூழலில் "நேற்று இன்று நாளை" திரைப்படத்தை அவர் தயாரிக்கவிருந்த நிலையில் எம்ஜிஆரிடம் அதில் நடித்து தருமாறு கேட்டு இருக்கிறார். அப்போது எம்ஜிஆரும் அதற்கு ஓகே சொல்லி இருக்கிறார்.
Netru indru naalai
உடனே எம்.எஸ்.வி-யிடம் சென்ற அசோகன் முதலில் 20 டியூன்களை வாங்கி எம்ஜிஆரிடம் கொடுக்க, இந்த டியூன்கள் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் எம்.எஸ்.பி-யை நல்ல டியூனாக போட சொல்லுங்கள் என்று கூறினாராம். உடனே எம்ஜிஆர் சொன்னதை நேரடியாக எம்.எஸ்.வி-யிடம் வந்து அசோகன் சொல்ல, மீண்டும் அவர் சில டியூன்களை போட்டு அசோகனிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அதை கேட்ட எம்ஜிஆர் இதுவும் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது. மீண்டும் நீங்கள் எம்.எஸ்-யிடம் சென்று வேறு சில டியூன்களை வாங்கி வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
இப்படியே 40-க்கும் மேற்பட்ட டியூன்களை அந்த படத்திற்காக அவர் இசையமைத்தும் அதை எம்ஜிஆர் ஓகே சொல்லாத நிலையில், இனி என்னால் உங்களுடைய திரைப்படத்திற்கு இசையமைக்க முடியாது என்று கடுமையாக கூறியிருக்கிறார் எம்.எஸ் விஸ்வநாதன். இந்த தகவலை அறிந்த எம்ஜிஆர் உடனடியாக அவரை நேரில் சந்தித்து. இங்க பாருங்க எஸ் எம்.எஸ்.வி, அசோகனிடம் படம் நடித்து அடித்து தருவதாக ஒப்புக்கொண்டேன். ஆனால் பாருங்க நான் கால்ஷீட் கொடுக்க எனக்கு ஒரு நாள் கூட இல்லை, நீங்கள் டியூன் கொடுத்து விட்டால் உடனே அவர் என்ன வச்சி படம் எடுக்க ஆரம்பிச்சிடுவாரு. அதனால் தான் அதை நான் தள்ளி போட்டேன். உண்மையிலேயே உங்களுடைய இசை மிக அருமையாக இருக்கிறது. இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று விளையாட்டாக கூறினாராம். இப்படி தன்னுடைய கால்ஷீட் இல்லை என்பதை மறைக்க அடிக்கடி இது போன்ற நாடகங்களை எம்ஜிஆர் செய்வார் என்று கூறப்படுகிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு "நேற்று இன்று நாளை" திரைப்படம் 1974 ஆம் ஆண்டு எம் எஸ் விஸ்வநாதன் இசையில் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆனது.
இவர் தான் காரணமா? தனுஷுடன் மீண்டும் இணைகிறாரா ஐஸ்வர்யா? விரைவில் வருகிறதாம் குட் நியூஸ்!