இவர் தான் காரணமா? தனுஷுடன் மீண்டும் இணைகிறாரா ஐஸ்வர்யா? விரைவில் வருகிறதாம் குட் நியூஸ்!

First Published | Oct 17, 2024, 7:18 PM IST

விவாகரத்து பெற்று பிரிவதில் உறுதியாக இருந்த தனுஷும், ஐஸ்வர்யாவும், மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
 

Dhanush - Aishwarya Rajinikanth

பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து வந்த போது, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் காதலிப்பதாக  வெளியான செய்திகள், இவர்களின் திருமணத்திற்கு காரணமாக அமைந்தது.

இது போன்ற செய்திகளை பார்த்த, ரஜினிகாந்த்  முதல் வேலையாக தயாரிப்பாளர் கஸ்தூரிராஜாவுக்கு போன் செய்து தன்னுடைய மகளை உங்கள் வீட்டு மருமகளாக ஆக்கிக் கொள்ள சம்மதமா? என கேட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் திருமணம் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

Aishwarya Rajinikanth Divorce

தனுஷ், ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட போது சில லட்சங்களே சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார். ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரே, இயக்குனர், தயாரிப்பாளர், என பன்முக திறமையாளராக மாறினார். தனுஷின் வளர்ச்சிக்கு ஐஸ்வர்யா மிக முக்கிய காரணம் என்றால், அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதே போல் தன்னுடைய நடிப்பு திறமையால் கோலிவுட்டை தாண்டி, டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்,அளவுக்கு வளர்ந்தார்.

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் சுமார் 20  வருடங்கள் ஒற்றுமையான நட்சத்திர ஜோடிகளாக வாழ்ந்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு அடையாளமாக யாத்ரா - லிங்கா என இரண்டு மகன்களும் பிறந்தனர். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு, விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக கூறிய தகவல், ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலகிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

3 வயதில் அம்மாவுடன் நடுத்தெருவில் நின்றேன்! பிக்பாஸ் 8 போட்டியாளர் அன்ஷிதாவின் கண்ணீர் கதை!

Tap to resize

Aishwarya Rajinikanth Marriage

இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம், தனுஷ் ஹீரோயின்களுடன் நெருங்கி பழகி வருவது என கூறினாலும், ஒரு சில ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் குடும்பத்தினரை மதிப்பதில்லை என்பது தான் காரணம் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை தனுஷோ அல்லது ஐஸ்வர்யாவோ ஒருமுறை கூட தங்களுடைய விவாகரத்து பற்றி வெளிப்படையாக பேசியது இல்லை.

மேலும் ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் குழந்தைகளுக்காகவாவது சேர்ந்து வாழ வேண்டும் என குடும்பத்தினர் விருப்பப்பட்டனர். இவருக்குள்ளும் சமாதான பேச்சு வார்த்தைகள் நடந்த நிலையில், இருவருமே விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.  அக்டோபர் 6-ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரரான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், இவர்களுடைய விவாகரத்து வழக்கை அக்டோபர் 19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Aishwarya and Dhanush Divorce Cancelled

தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் தங்களுடைய விவாகரத்து முடிவை கைவிடும் எண்ணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 

அதாவது, ரஜினிகாந்தின் உடல்நலக்குறைவுக்கு குடும்ப பிரச்சனைகளும் ஒரு காரணம் என்று சில விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், ரஜினிகாந்தின் நிம்மதியை கருத்தில் கொண்டு ஐஸ்வர்யா தன்னுடைய விவாகரத்து முடிவை கைவிடலாம் என்கிற யோசனையில் உள்ளாராம். அதே போல் ஐஸ்வர்யா - தனுஷ் மகன்களின் ஆசையும் அப்பா - அம்மா இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்பதே என கூறப்படுகிறது. ரஜினிகாந்துக்கு வேட்டையன் பட வாழ்த்து கூறியது மட்டும் இன்றி.. ஐஸ்வர்யா படம் பார்த்த அதே தியேட்டரில் தான் தனுஷும் படம் பார்த்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது மனதளவில் இருவரும் சேர்ந்து வாழ தயாராகி விட்டதாகவும், விரைவில் குட் நியூஸ் வரும் என கூறப்படுகிறது.

பின் வாங்கிய லப்பர் பந்து! அக்டோபர் 18 ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
 

Latest Videos

click me!