தமிழ் சினிமாவை பொறுத்தவரை 1980களின் இறுதியில் இசைஞானி இளையராஜாவின் ஆதிக்கம் தான் எங்கும் நிறைந்திருந்தது. இந்த சூழலில் தான் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அறிமுகமானார். ஆனால் அதே காலகட்டத்தில் தான் கானா பாடல்களின் தந்தையாக விளங்கும் தேவாவும் அறிமுகமானார். இருப்பினும் இந்த இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் தானும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக மாற வேண்டும் என்று எண்ணி, அதுவரை பிளாட்பார்ம் பாடல்கள் என்று அழைக்கப்பட்டு வந்த பாடல்களுக்கு கானா பாடல் என்று பெயரிட்டு, தன்னுடைய படங்களில் அதை பெரிய அளவில் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், அந்த விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்தவராக மாறினார் தேவா.
கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழில் பிரபல நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "மனசுக்கேத்த மகராசா". அதுவரை ராமராஜன் திரைப்படங்களுக்கு இளையராஜா மட்டுமே இசையமைத்து வந்த நிலையில் அந்த திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அரிமமானார் தேவா. ஆனால் இந்த திரைப்படத்திற்கு முன்னதாகவே "மாட்டுக்கார மன்னாரு" என்ற திரைப்படத்தில் அவர் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மனைவி தர்ஷனா உடனான விவாகரத்து; முதல் முறையாக வாய் திறந்த விஜய் ஏசுதாஸ்!