சினிமாவுக்கு நிகரான திரைக்கதையுடன் ஒளிபரப்பாகி வருவதால் சின்னத்திரை சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் கணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டின் 41-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் டிவி சீரியல்கள் பின்னடவை சந்தித்துள்ளன.
24
Serial TRP Rating
டாப் 10 பட்டியலில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இந்த வாரம் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலும் டாப் 10 ரேஸில் இணைந்துள்ளது. அந்த சீரியல் 5.74 டிஆர்பி புள்ளிகளுடன் 10வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 8வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 6.05 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 9-வது இடத்தில் இருந்த மல்லி சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 8-ம் இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல் விஜய் டிவியில் நம்பர் ஒன் சீரியலாக இருந்த சிறகடிக்க ஆசை, கடந்த வாரமே டாப் 5ல் இருந்து வெளியேறிய நிலையில், இந்த வாரம் 6.95 புள்ளிகளுடன் 7-ம் இடத்தை பிடித்திருக்கிறது. அந்த சீரியலை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் ராமாயணம் சீரியல் 7.50 டிஆர்பி புள்ளிகளுடன் 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது. கேப்ரியல்லா நடித்த சுந்தரி சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரம் ஐந்தாவது இடத்திலேயே நீடிக்கிறது. இந்த சீரியலுக்கு 7.95 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.
44
Top 10 Tamil Serial TRP
அடுத்த நான்கு இடங்களையுமே சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. புதிதாக தொடங்கப்பட்ட மருமகள் சீரியல் 8.40 டிஆர்பி புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 2ம் இடத்தில் இருந்த மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 9.03 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக முதல் இரண்டு இடத்தை கயல் மற்றும் சிங்கப்பெண்ணே ஆகிய சீரியல்கள் பிடித்துள்ளன. இதில் 2ம் இடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.04 டிஆர்பி புள்ளிகளும், முதலிடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 9.90 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.