
திரைப்படத்தில் இருந்து, சீரியலுக்கு வந்த நடிகர் ரஞ்சித் தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக்பாஸ் தமிழ் சீசன் 8' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். முதல் வாரத்திலேயே இவர் நடிக்கிறார் என கூறி நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மக்களால் காப்பாற்றப்பட்ட பிரபலமாக மாறினார். இதை தொடர்ந்து, இந்த வாரமும் மிகவும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் விளையாடி வரும் ரஞ்சித், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.
பிக்பாஸ் வீட்டில், ரஞ்சித் நடந்து கொள்ளும் விதம் உண்மையாக இல்லை என கூறி... கடந்த வாரம் இவரை ஃபேக் என போட்டியாளர்கள் கூறியதை கேட்டு மனதளவில் மிகவும் உடைந்து போனார். அப்போது கேமரா முன் வந்து நின்று, இந்த உலகமே என்னை காரி துப்பினாலும் பரவாயில்லை பிரியா நீ மட்டும் தப்பா நினைக்காதே என அவர் கண்ணீருடன் பேசியது மக்கள் மனதையே உருக வைத்தது.
பின் வாங்கிய லப்பர் பந்து! அக்டோபர் 18 ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள தனது கணவர் வெள்ளந்தியாக இருக்கிறார் என்பது எந்தவிதத்திலும் தவறு இல்லை என கூறி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை வெற்றிபெற வைக்க காசு கொடுத்து புரோமோஷன் செய்ய சில நிறுவனங்கள் தன்னை அணுகியதாக சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார் பிரியா ராமன். இதுகுறித்து அவர் பேசுகையில், " பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக, வெளியில் சிலர் காசு கொடுத்து புரமோஷன் செய்கிறார்கள். ஆனால் எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் நான் இல்லை. நாங்க எந்த ஒரு Paid புரமோஷனும் செய்யவில்லை. எனக்கு தெரியும்... சில போட்டியாளர்கள் 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை கொடுத்து பி ஆர் மூலம் தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள் என்றதும், இதற்கு தொகுப்பாளரே அதிர்ச்சியாகி இப்படி எல்லாம் செய்யலாமா?என கேட்க, இதுபோன்ற செயல்கள் பயங்கரமா நடக்கிறது.
என்னையே இரண்டு ஏஜென்சிகள் தொடர்பு கொண்டு ப்ரமோஷன் பண்ணிக்கலாம் என கூறினர். அவரோடு சேர்த்து உங்களையும் ஒரு பிராண்டாக மாற்றுகிறோம் என கூறினர். இதற்கு நான் எங்களுக்கு இருக்கும் பிரபலம் போதும் எனக் கூறிவிட்டேன். காசு கொடுத்து நான் ஃபேம் ஆக முடியாது. நான் எதற்கு காசு ஒரு பெயரை எடுக்க வேண்டும். முன்பில் இருந்தே நான் ஒரு பிரபலமாக அறியப்பட்டவர். அதேபோல் ரஞ்சித்தும் மிகவும் பிரபலமானவர்தான். இதற்கு மேல ரஞ்சித்தை விற்க முடியாது.
டி.எம்.சௌந்தர்ராஜனை போண்டியாக்கிய டி.ராஜேந்தரின் ஒரே ஒரு பாடல்!
அவர் செந்தூரப்பூவே சீரியலில் நடித்தார். அதன் பின்னர் ஒரு சிறு கேப்புக்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் நடித்தார். கவுண்டம்பாளையம் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். அவர் சினிமாவை விட்டு எங்குமே செல்லவில்லை. எனவே இவருக்கு தனியாக நாம் ஒரு பிரமோஷனை தேடி தரத் தேவையில்லை. மக்கள் அவரை பார்க்கும் போது ரஞ்சித்... அவராகவே இருக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.மேலும் அவர் வெள்ளந்தியா இருக்கிறார். அது தப்பு கிடையாது.
சாதுரியமா இருந்தால் நிறைய விஷயங்களை வெல்லலாம். ஆனால் அவர்களிடம் ஒரு பியூரிட்டி இருக்காது. ரஞ்சித் நான் ஒரு வெள்ளத்தியாகவே இருந்துவிட்டு போகிறேன் எனக் கூறுகிறார். அது தனக்கு எந்த விதத்திலும் தவறாக தெரியவில்லை. ரஞ்சித் நான் வெளியே போகிறேன் என சொல்லும்போது உங்களுக்கு என்ன தோன்றியது என தொகுப்பாளர் பிரியா ராமனிடம் கேட்டதற்கு, அவர் மீதான மதிப்பு கூடியது. இதற்கு ஒரு தனி கட்ஸ் வேண்டும். இதுபோன்ற செயல்கள் தான் அவர் மீதான அன்பை எனக்கு கூட்டுகிறது. ரொம்ப ஈஸியா அடுத்தவங்க மேல ஒரு விஷயத்தை சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம். நிறைய பேர் அங்க எதுவும் செய்யாமல் உள்ளார்கள். அவர்கள் விளையாட எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என கூறியுள்ளார்.
கன்டென்ட் கொடுக்க வேண்டும் என சில விளையாடி வெளியேறினாலும்... கம்முனு இருந்து, காசு கொடுத்து புரமோஷன் செய்து, வோட்டு வாங்கி தான் பலர் இறுதி வரை நின்று விளையாடுகிறார்களோ? என்கிற சந்தகமும் தற்போது பல ரசிகர்கள் மனதில் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன ஆச்சு? நடக்க கூட முடியாமல்... பாண்டியன் ஸ்டோர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தூக்கிவரப்பட்ட நிரோஷா!