
தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. தீபாவளி வந்தாலே புதுப்புது ஆடைகள் உடுத்துவது, பட்டாசு வெடிப்பது மட்டுமின்றி புதுப்படங்களை தியேட்டரில் பார்த்து ரசிப்பதும் ஒரு வழக்கமாக இருக்கிறது. அதனால் தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதையொட்டி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
அமரன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தான் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் பெரிய பட்ஜெட் படமாகும். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாய் பல்லவி இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படம் உருவாகி இருக்கிறது.
பிரதர்
அமரன் படத்துக்கு போட்டியாக ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், பூமிகா, சீதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 31-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
பிளெடி பெக்கர்
கவின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பிளெடி பெக்கர். இப்படத்தை சிவபாலன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து உள்ளார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் நடிகர் கவின் பிச்சைக்காரனாக நடித்திருக்கிறார். அவருடன் ரெடின் கிங்ஸ்லி, விஷவ்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படமும் அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது.
இதையும் படியுங்கள்... Soft மோடில் ஜெயம் ரவி.. Rugged மோடில் சிவகார்த்திகேயன் - தீபாவளிக்கு நேருக்கு நேர் மோதும் யங் ஹீரோஸ்!
லக்கி பாஸ்கர்
துல்கர் சல்மான் நடிப்பில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் தான் லக்கி பாஸ்கர். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கி இருந்தார். சித்தாரா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். இப்படமும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
ஜீப்ரா
ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜீப்ரா. இப்படத்தில் ஊர்வசி ரவ்துலா, சத்யதேவ், பிரியா பவானி சங்கர், சத்யராஜ், சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தெலுங்கில் உருவாகி உள்ள இப்படமும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
கா
கிரண் அப்பாவரம் நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ள திரைப்படம் கா. இப்படத்தை சுஜித் மற்றும் சுதீப் ஆகியோர் இயக்கி உள்ளனர். இப்படத்தில் ஹீரோயினாக தன்வி ராம் மற்றும் நயன் சரிகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகிறது.
பகீரா
டி.ஆர்.சூரி இயக்கத்தில் கன்னட மொழியில் உருவாகி உள்ள திரைப்படம் பகீரா. இப்படத்தில் ஸ்ரீ முரளி, ருக்மிணி வசந்த், பிரகாஷ் ராஜ், ரகு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமும் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது.
பூல் புலையா 3
இந்தியில் தீபாவளி ஸ்பெஷல் படமாக பூல் புலையா 3 படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் சக்கைப்போடு போட்ட நிலையில், அதன் மூன்றாம் பாகம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. கார்த்தி ஆர்யன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை அனீஸ் பஸ்மீ இயக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... மீண்டும் பிக்பாஸில் கமல்ஹாசன்? அப்போ விஜய் சேதுபதி நிலைமை!