லோகேஷின் லெவன் படத்துக்காக ஷ்ருதிஹாசன் பாடிய இங்கிலீஸ் சாங்!!

First Published | Oct 17, 2024, 9:55 AM IST

அறிமுக இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் லெவன் படத்திற்காக டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடிய உற்சாகமிக்க பாடலை கமல் வெளியிட்டுள்ளார்.

shruti haasan

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருக்கும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் திரைப்படம் தான். 'லெவன்'. இப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள இப்பாடலை கமல்ஹாசனின் மகள் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ளார். 

'தி டெவில் இஸ் வெயிட்டிங்' எனும் இப்பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ். முன்னணி இசை நிறுவனமான சரிகம இப்பாடலை வெளியிட்டு உள்ளது. 

shruti haasan song

'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தயாரித்த ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் 'லெவன்' திரைப்படத்தையும் தயாரித்து உள்ளது.

இயக்குநர் சுந்தர் சி-யிடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் 'ஆக்‌ஷன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்', 'இன்ஸ்பெக்டர் ரிஷி' வெப் தொடர், 'சரபம்', 'சிவப்பு' மற்றும் சசிகுமாரின் 'பிரம்மன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நவீன் சந்திரா தான் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஸ்ருதிஹாசன் Kidnap செய்யப்பட்டாரா? ரியல் சம்பவத்தை படமாக எடுத்து தேசிய விருது வாங்கிய கமல் - அது எந்த படம்?

Tap to resize

shruti haasan sing for eleven Movie

மேலும் 'விருமாண்டி' புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், பிக்பாஸ் புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

Eleven Movie

முதல் பாடலான 'தி டெவில் இஸ் வெயிட்டிங்' குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ், "உற்சாகம் மிகுந்த இந்த பாடல் உயர்தரத்தில் முழுக்க ஆங்கிலத்தில் உருவாகி உள்ளது. டி. இமானின் இசையும் ஷ்ருதி ஹாசனின் குரலும் பாடலுக்கு மிகப்பெரிய பலமாகும். நாயகன் மற்றும் வில்லனைக் குறித்த பாடலாக இது அமைந்து உள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார். 'லெவன்' படத்தை நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இதையும் படியுங்கள்... கையில் ஆயுதம்... கண்ணில் பயம்! 'கூலி' படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் கேரக்டர் போஸ்டர் வெளியானது!

Latest Videos

click me!